Monday, April 29, 2024

‘அய்யா பாஸ் பண்ணி விடுங்க, ப்ளீஸ்’ – நீதிபதியை கடுப்பேற்றிய அரியர் மாணவர்கள்!!

Must Read

அரியர் தேர்வுகள் ரத்து குறித்த உயர்நீதிமன்ற ஆன்லைன் விசாரணையில் பல மாணவர்கள் நீதிபதிகளை கடுப்பேற்றியுள்ளனர். இதனால் வழக்கு விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிகமானவர்கள் ஆன்லைன் விசாரணையில் லாக்இன் செய்துள்ளதால் அவர்களை நீதிமன்ற பணியாளர்கள் நீக்கி வருகின்றனர்.

அரியர் வழக்கு:

கொரோனா நோய் பரவல் காரணமாக தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் தேர்வுகளை ரத்து செய்தது. அதில் அரியர் மாணவர்களின் தேர்வுகளையும் ரத்து செய்ய உத்தரவிட்டது. இதற்கு பலரும் தங்களது எதிர்ப்புகள் மற்றும் கண்டனங்களை தெரிவித்தனர். அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த வழக்கிற்காக விசாரணை இன்று ஆன்லைன் வாயிலாக 26வது வழக்காக விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கினை உயர்நீதிமன்ற நீதிபதிகளான சத்திய நாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு விசாரித்தது. இதனை அடுத்து இந்த ஆன்லைன் விசாரணையில் வழக்கறிஞர்கள், மாணவர்கள், செய்தியாளர்கள் என்று 350 பேருக்கும் அதிகமானோர் லாக்இன் செய்திருந்தனர்.

வழக்கு நிறுத்தி வைப்பு:

விசாரணையின் போது பலரும் மியூட் போடாமல் இருந்துள்ளனர். இதன் காரணமாக பலரது வீடுகளில் டிவி சத்தம், குழந்தைங்களின் சத்தம், பேச்சு சத்தம் கேட்டுள்ளது. இதனால் விசாரணை ஒழுங்காக நடைபெறவில்லை. அதே போல் நீதிபதிகள் அனைவரையும் அமைதியாக இருக்கும்படியும், வீணாக இருப்பவர்களை லாக்அவுட் செய்யவும் வலியுறுத்தி உள்ளனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆனால், யாரும் அவர்களின் பேச்சினை கேட்காததால் விசாரிக்கப்பட இருந்த அனைத்து வழக்குகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது மட்டும் அல்லாமல் சில மாணவர்கள் நீதிபதிகளை கடுப்பேற்றும் படியாக சேட்பாக்ஸில் கமெண்ட் செய்துள்ளனர். சிலர் “அய்யா பாஸ் பண்ணி விடுங்க” என்பது போலவும் கமெண்ட் செய்துள்ளனர். கடந்த விசாரணையின் போதும் மாணவர்கள் இது போல் செய்ததால், நீதிபதி எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -