3வது முறையாக விண்ணிற்கு வீரர்களை அனுப்பிய அமெரிக்கா – வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஃபால்கான் 9 ராக்கெட்!!

0

விண்வெளி நிலையத்திற்கு ஆராய்ச்சி மேற்கொள்ள தற்போது 3வது முறையாக அமெரிக்கா, வீரர்களை விண்ணிற்கு அனுப்பியுள்ளது. இவர்களை ஃபால்கான் 9 என்னும் ராக்கெட் மூலம் அனுப்பியுள்ளது.

ஃபால்கான் 9 ராக்கெட்

உலகில் அனைத்து நாடுகளும் தற்போது விண்வெளி ஆராய்ச்சிகளை போட்டி போட்டு செய்து வருகின்றனர். முதலில் செற்கைகோள்களை அனுப்பி சோதனைகளை மேற்கொண்டனர். தற்போது விண்ணிற்கு மனிதர்களை அனுப்பி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த வகையில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சேர்ந்து விண்ணிற்கு 4 மனிதர்களை ஃபால்கான் 9 ராக்கெட் மூலம் அனுப்பியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பப்பட்டது. முதலில் இந்த ராக்கெட் நேற்று விண்ணில் பாய இருந்தது. ஆனால் நேற்றைய சூழல் இதற்கு சாதகமாக இல்லாமல் இருந்ததால் இந்த ராக்கெட் இன்று மனிதர்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. 3 வது முறையாக அமெரிக்கா விண்ணிற்கு மனிதர்களை அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற தாமஸ் பெஸ்கெட் , மேகன் மெக் ஆர்தர், நாசா காமண்டர் ஷேன் கிம்பரோ மற்றும் ஜப்பான் விண்வெளி வீரரான அகிஹிகோ ஹோஷைட் ஆகியோர் ராக்கெட்டில் சென்றுள்ளனர்.

ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் புகைப்படம்!!

பூமியில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் விண்வெளி நிலையம் நிலை கொண்டிருக்கிறது. அந்த மையத்திற்கு இந்த 4 வீரர்கள் சுமார் 24 மணி நேரத்தில் சென்றடைவர். இதன் மூலம் விண்ணிற்கு மிக எளிமையாக சென்று வருவது எப்படி என்பதை அறிந்து வரும் காலங்களில் சக மனிதர்கள் கூட விண்ணிற்கு செல்லலாம் என்று பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here