ஆச்சு அசலாக விஜய்யை பிரதிபலித்த “பாண்டியன் ஸ்டோர்ஸ்” பிரபலம் – வைரலாகும் வீடியோ!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் பிரபலம் விஜயை அப்படியே பிரதிபலிக்கும் விதத்தில் ரீலிஸ் ஒன்றை செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்களுக்கு இவருக்கு இப்படி ஒரு திறமையா?? என வியந்து வருகின்றனர்.

நடிகர் குமரன்

வெள்ளி திரையில் வெற்றி அடையும் பல ஹீரோக்கள் ஆரம்பத்தில் சீரியல்கள் மூலமாக தான் பிரபலம் அடைந்து இருப்பர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தான், குமரன். இவர் “ஈரமான ரோஜாவே” சீரியலின் ஆரம்பத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், இவர் தற்போது “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரம் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற வைத்தது என்று கூட கூறலாம். இவர் இந்த சீரியலில் நடித்ததற்காக பல விருதுகளையும் வென்றுள்ளார். இவர் சீரியல் நடிகர் மட்டும் அல்ல நன்றாக டான்ஸ் ஆட கூடியவரும் கூட. இவர் விஜய் தொலைக்காட்சியின் பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொன்ன கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் புகைப்படம்!!

தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரீல்ஸ் செய்து அதனை பதிவிட்டுள்ளார். அவர் “தளபதி” விஜய்யின் “குட்டி புலி ஆட்டம், வெட்ட வெளி ஓட்டம்” என்ற பாடலிற்கு தனது நண்பர்களுடன் இணைத்து நடனம் ஆடி உள்ளார். ஆச்சு அசலாக நடிகர் விஜய்யை போலவே இவர் ஆடியுள்ளதை அடுத்து இவருக்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். லைக்குகளுக்கும் அந்த ரீல்சுக்கு குவிந்து வருகின்றது.

முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here