கொரோனா தடுப்பு மருந்து விலை உயர்வு எதிரொலி – புதிய மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு மையம் ஒப்புதல்!!

0

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. தற்போது இதனை கட்டுப்படுத்த மருந்து கட்டுப்பாட்டு மையம் புதிய மருந்து ஒன்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா தொற்று:

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மக்களை மிக கடுமையாக தாக்கி வருகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தங்களது உயிரை இழந்து வருகின்றனர். அதேபோல் நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இதனை தடுப்பதற்காக நாட்டில் கொரோனா தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்து விநியோகிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை அந்த நிறுவனம் ரூ.400 ஆக அதிகரித்தது. இதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டுமல்லாமல் தற்போது நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி மருந்து நிறுவனத்துடன் ஆலோசித்துள்ளார்.

மருத்துவமனைகளில் ஏப்ரல் 26க்கு பின் சிகிச்சை நிறுத்தம் – அதிர்ச்சியில் மக்கள்!!

இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக மற்றொரு ஓர் புதிய மருந்திற்கு, மருந்து கட்டுப்பாட்டு மையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி சைடஸ் காடிலா நிறுவனத்தின் ‘விராஃபின்’, பெகிலேட்டட் இன்டர்ஃபெரான் ஆல்பா -2 பி, மருந்துகளை மிதமான கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள இளைஞர்களுக்கு பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு மையம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்து விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here