சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

0

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வர உள்ள ‘டாக்டர்‘ திரைப்படத்தின் வெளியீடு மார்ச் மாதம் 26 ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சிவகார்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் ‘டாக்டர்‘. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா அருள் மோகன் என்ற புதுமுக நடிகை நடித்துள்ளார். இவர்களுடன் இந்த திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு, பிக்பாஸ் அர்ச்சனா, சமுத்திரக்கனி, தீபா ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசையில் இப்படத்தின் பாடல் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

பிப்ரவரி 7 இல் தமிழகத்திற்கு வருகை தரும் சசிகலா – டிடிவி தினகரன் அறிவிப்பு!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘சிவகார்த்திகேயன் ப்ரொடக்சன்‘ மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கான ஒளிபரப்பு உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் குழுமம் பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் வெளியீடு குறித்த தகவல்கள் வந்துள்ளது. ‘டாக்டர்‘ திரைப்படம் வரும் மார்ச் மாதம் 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here