பள்ளி மாணவர்களுக்கு பாடம் புகட்டிய போலீசார் – சிவகங்கையில் நெகிழ்ச்சி சம்பவம்!!

0

சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், காதில் கடுக்கன், வளையம் ஆகியவற்றை அணிந்து வந்த மாணவர்களுக்கு நன்னெறி வகுப்புகள் எடுத்துள்ளனர்.

பாடம் புகட்டிய போலீசார்

தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் காவல் துறையினர். இதன்படி துணை தாசில்தார் சேகர் தலைமையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பைபாஸ் ரோட்டில் போலீசார் வாகன சோதனையை மேற்கொண்டு வந்தனர். அப்போது அரசு உதவி பெரும் பள்ளியில் பயிலும் சில மாணவர்கள் காதில் கடுக்கன், தோடு, வளையம் ஆகியவற்றை அணிந்தும் சட்டையின் மேல் பட்டனை கழற்றி விட்டபடி சாலையில் நடந்து வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

police teaches

சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை அழைத்து விசாரித்த போது அவர்கள் பள்ளிக்கு சென்று கொண்டிருப்பது தெரியவந்தது. மாணவர்களை கண்ட போலீசார், நாங்கள் படிக்கும் வயதில் இதுபோன்ற தோடு மற்றும் கடுக்கனை அணிந்து வந்தால் கடுமையான தண்டனை கிடைக்கும். இதுபோன்ற செயல்கள் செய்வது தவறு என பள்ளியின் நன்னெறி வகுப்பில் சொல்லி கொடுப்பார்கள்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸில் கண்ணனுக்கு ஜோடியாகும் விஜய் டிவி பிரபலம் – கொண்டாடத்தில் ரசிகர்கள்!!

எனவே படிக்கும் வயதில் இது போன்ற அணிகலன்களை உபயோகிப்பது தவறு என கூறிய போலீசார் மாணவர்களிடமிருந்த அணிகலன்களை வாங்கி குப்பையில் வீசியுள்ளனர். போலீசாரின் அறிவுரையை ஏற்ற மாணவர்கள் சிரித்தவாறே அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here