முல்லை பெரியார் அணை – பலத்த மழையால் நீர்வரத்து அதிகரிப்பு!!

0

நேற்று முல்லை பெரியார் ஆணை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் எதிரொலியாக தற்போது முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

முல்லை பெரியார்:

இந்த ஆண்டு தொடக்கம் முதல் வானிலை நிலவரம் சற்று வித்தியாசமாக இருந்து வருகிறது. காரணம் வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்தில் பலத்த மழை பெய்தது. பின்பு தற்போது தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணைப்பகுதியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பின்பு அணையின் நீரைமட்டம் சற்று குறைந்தது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் கோடை காலம் துவங்குவதற்கு முன்பு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் வறண்ட நிலமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முல்லை பெரியார் அணை பகுதியில் பலத்த மழை பெய்தது. பெரியாறு அணையில் 34.6மிமீ மற்றும் தேக்கடி ஏரியில் 9.6மிமீ மழை பெய்தது. இதன் எதிரொலியாக அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,554கன அடியாகவும், தேக்கடி ஏரியில் 9.6 கன அடியும் வந்தது.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

இதனால் அணையின் நீர்மட்டம் 129.00 அடியாக உயர்ந்தது. மேலும் இன்றைய நிலவரப்படி அணைக்கு 803 கன அடி நீர் வருகிறது. அணையிலிருந்து 303 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக லோயர் கேம்பில் உள்ள பெரியாறு மின்சார நிலையத்தில் மூன்றாவது மின்னாக்கி மட்டும் இயங்கி, 25 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here