‘பாண்டியன் ஸ்டோர்ஸில் கண்ணனுக்கு ஜோடியாகும் விஜய் டிவி பிரபலம் – கொண்டாடத்தில் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ சீரியல் முடிவடைய இருக்கும் நிலையில் அதில் நடித்த பிரபலம் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இணைந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸில் புதுமுகம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் புதுமுகம் ஒருவர் இணைய உள்ளார். முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா மரணத்துக்கு பிறகு, அந்த கதையில் நடிகை காவ்யா நடித்து வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

kannan

நடிகை சித்ராவின் கதாப்பாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பு, கொஞ்சம் கொஞ்சமாக நடிகை காவ்யாவுக்கும் கிடைத்து வருகிறது. அதாவது காவ்யாவை, முல்லையாக மக்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். இந்நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் கடைக்குட்டியாக நடித்து வரும் கண்ணனுக்கு புதிதாக ஒரு ஜோடி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 23,285 பேர் கொரோனாவால் பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!

சமீப காலங்களில் கண்ணன் கதாப்பாத்திரத்துக்கு நல்ல ரீச் கிடைத்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்க பல புதுமுகங்கள் இறக்கி விடப்பட்டனர். அந்த வகையில் மெஹர் என்ற முஸ்லீம் பெண் அவருக்கு ஜோடியாக நடித்து வந்தார். பின்பு சில நாள் ஐஸ்வர்யா என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை வைஷாலி கண்ணனுக்கு ஜோடியாக வந்தார்.

தொடர்ந்து மகாசங்கமத்தில் பாக்கியலட்சுமி தொடரில் இனியாவாக நடித்து வரும் நேஹா, கண்ணனுக்கு ஜோடியாக வந்தார். தற்போது விஜய் டிவியின் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ தொடரில் நடித்து வந்த நடிகை தீபிகா, பாண்டியன் ஸ்டோர்ஸில் இணைந்துள்ளார். நடிகை தீபிகா மற்றும் கண்ணன் சம்பந்தமான காட்சிகள் இன்றைய தொடரில் ஒளிபரப்பாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here