
சிறகடிக்க ஆசை சீரியல் இப்போது பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் விஜயா முத்துவிடம் பணம் கேட்கிறார். முத்து பணம் இல்லாமல் தவிப்பதை பார்த்து மீனா தன் தம்பியிடம் வளையலை வைத்து பணத்தை ஏற்பாடு செய்கிறார். இப்படி சீரியல் நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது முத்து மீனாவிடம் நீ எதுக்கு பணத்தை கொடுத்த என்று சண்டை போடுவாராம்.
Enewz Tamil WhatsApp Channel
பின் மீனா எதையோ சொல்லி சமாளித்து விட விஜயா இன்னும் பணம் பத்தவில்லை என்று முத்துவிடம் கேட்பாராம். உடனே முத்து எல்லாத்தையும் நான் தான் பார்க்கணுமா. உங்க பையன் மனோஜ் வேலைக்கு தான போறான் அவன் கிட்ட போய் கேளுங்க என சத்தம் போடுவாராம்.பதிலுக்கு மீனாவும் நாங்க மட்டும் தான் இந்த வீட்டுல இருக்கோம். போய் உங்க மருமக ரோகிணியிடம் கேளுங்க என அசிங்கப்படுத்தி விடுவாராம்.