சரிவில் இருந்து மீண்ட பங்குச்சந்தை – இன்றைய மாலை நிலவரம்!!

0

கடந்த 2 நாட்களாக இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகளில் சரிவை கண்டு வந்தது. தற்போது இன்று மாலை நிலவரப்படி இந்திய பங்கு சந்தை சரிவிலிருந்து மீண்டுள்ளது. இதனால் பங்கீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பங்குச்சந்தை:

இந்த மாத தொடக்கத்தில் பங்கு சந்தை யாரும் எதிர்பாராத அளவிற்கு சென்செக்ஸ் புள்ளிகளில் வரலாற்று உச்சத்தை தொட்டது. மேலும் இந்த ஆண்டு இந்தியா பொருளாதாரத்தில் அபார வளர்ச்சி அடையும் என்று இந்தியா பொருளாதார வல்லுநர்கள் அறிவித்திருந்தனர். அவர்கள் கூறியது போலவே இந்தியா பங்கு சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் தொடர் வளர்ச்சியை கண்டு வந்தது. அதன்பிறகு கடந்த 2 நாட்களாக இந்திய பங்கு சந்தை சரிவை கண்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இன்று காலை தொடக்கத்தில் கூட இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தான் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று மாலை நிலவரப்படி வர்த்தக நேர முடிவில் 222.13 புள்ளிகள் உயர்ந்து 51,531.52 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. இது மொத்த வர்த்தகத்தில் 0.43 சதவீதமாகவும். இதுபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிலவரப்படி 66.80 புள்ளிகள் உயர்ந்து 15,173.30 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மொத்த வர்த்தகத்தில் இது 0.44 சதவீதம் உயர்வாகும்.

எல்லை மீறினால் கணக்கு முடக்கம் – இன்ஸ்டாகிராம் அதிரடி அறிவிப்பு!!

சென்செக்ஸ் புள்ளி பட்டியலில் இருக்கும் முதல் 30 நிறுவனங்களின் பங்குகளில் 15 நிறுவனங்களின் பங்குகள் தற்போது உயர்வாக காணப்படுகிறது. இதில் அதிகபட்சமாக அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 4.07 சதவீதமும், சன் பார்மா 2.62 சதவீதமும், பஜாஜ் பைனான்ஸ் 1.60 சதவீதமும், பவர் கிரிட் 1.59 சதவீதமும் உயர்ந்துள்ளது. பங்குசந்தை தற்போது உயர்வதற்கு ரிலையன்ஸ் மற்றும் உலோக விற்பனை துறையின் பங்குகள் உயர்ந்தது தான் காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here