பருவம் தவறிய மழையால் அதிகரிக்கும் வெங்காய தட்டுப்பாடு – தொடர்ந்து விலையேற்றம்!!

0

கடந்த சில நாட்களாகவே சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மொத்த சந்தையில் கிலோ ரூ.130 வரையிலும் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.150 வரையிலும் விற்பனை செய்யப்படும் சின்ன வெங்காயம் மக்களின் கண்களில் கண்ணீர் வர வைக்கிறது.

விலை உயர்ந்த வெங்காயம்:

தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சின்ன வெங்காயம் பருவம் தவறி பெய்த மழையினால் அழுகல் நோய்க்கு உள்ளானது. எனவே மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தைக்கு விற்பனைக்கு வந்த வெங்காயத்தின் அளவு வெகுவாக குறைந்ததால் அதன் விலை மிகவும் அதிகரித்துள்ளது. சேலம், திண்டுக்கல் , தருமபுரி ஆகிய பகுதிகளிலிருந்து மதுரைக்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்து இருப்பதால் மொத்த விலையில் கிலோ ரூ.100 முதல் ரூ.130க்கும் சில்லறை விலையில் கிலோ ரூ.130 முதல் 150க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

எல்லை மீறினால் கணக்கு முடக்கம் – இன்ஸ்டாகிராம் அதிரடி அறிவிப்பு!!

மதுரைக்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டம் புஞ்சம்புளியம்பட்டியில் கூடும் வாரச்சந்தைக்கு சேலம், தருமபுரி உள்பட பல்வேறு தமிழக பகுதிகளிலிருந்தும் கர்நாடக மாநிலத்திலிருந்தும் விவசாயிகள் வெங்காயம் மற்றும் விதை வெங்காயத்தை விற்பனைக்காக கொண்டு வருவார்கள். தற்போது வெங்காய சாகுபடி குறைந்துள்ளதால் கடந்த வாரம் 1200 மூட்டை வந்த வெங்காயம் மற்றும் விதை வெங்காயம் 600 மூட்டைகளாக குறைந்துள்ளது. கடந்த வாரம் ரூ.60க்கு விற்கப்பட்ட விதை வெங்காயம் இன்று கிலோ 170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வெங்காய விலையேற்றத்தினால் மக்கள் விதை வெங்காயத்தை வாங்க ஆர்வம் காட்டி வருவதும் இந்த விலையேற்றத்திற்கு காரணமாகும். பெரிய வெங்காயத்தின் வரத்து வழக்கம் போல இருப்பதால் கிலோ 40முதல் 50 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here