காதலர் தினத்தில் லாக்டவுனா?? வைரலாகும் முதல்வர் வீடியோ உண்மையா??

0

பிப்ரவரி 14ம் தேதி உலகம் முழுவதும் காதலர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த தினத்தில் லாக்டவுன் அறிவிக்குமாறு முதல்வர் பழனிச்சாமியிடம் ஒருவர் கேட்பது போலவும், அதற்கு அவர் ‘கோரிக்கை நிறைவேற்றப்படும்’ என கூறுவது போலவும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

காதலர் தினத்தில் லாக்டவுன்

பிப்ரவரி 14 ம் தேதியான வரும் ஞாயிற்று கிழமை உலகம் முழுவதும் காதலர்கள் தினம் கொண்டாடப்பட உள்ளது. காதலர் தினத்தில் காதலர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பையும், பரிசுகளையும் பரிமாறிக்கொள்வது வழக்கம். இதற்காக காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒரு வாரம் முன்னதாகவே காதலர் தின வாரம் கொண்டாடப்படுகிறது. இதனிடையே தமிழகத்தில் நடைபெறப்போகும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகிறது.

விஜய் டிவியில் நேரடியாக வெளியாகும் “ஏலே” திரைப்படம் – படக்குழு தகவல்!!

தேர்தலுக்கான பிரச்சாரத்தில், தமிழக முதல்வர் பழனிச்சாமி ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த 90s kid ஒருவர், ‘ஐயா பிப்ரவரி 14 அன்று லாக்டவுன் போடுங்கய்யா’ என கேட்பதுபோலவும், அதற்கு முதல்வர் ‘உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும்’ என கூறுவது போலவும் காணொளி ஒன்று வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து கொரோனா ஊரடங்கில், கல்லூரி மாணவர்கள் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கட்டணம் கட்டாத மாணவர்களுக்கு தேர்ச்சி முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து மாணவர் ஒருவர் முதல்வரிடம், ‘கட்டணம் கட்டாத மாணவர்களும் தேர்வில் தேர்ச்சி பெற செய்யுங்கள்’ என கோரிக்கை வைத்திருக்கிறார். இதற்கு தான் முதல்வர், ‘உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும்’ என கூறியுள்ளார். காதலர் தினத்தில் லாக்டவுன் என முதல்வர் அறிவித்தது போல வெளியான காணொளி முற்றிலும் பொய்யானது, அது யாரோ ஒருவர் எடிட் செய்துள்ளது என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here