பிகினி உடையில் இணையத்தையே தடுமாற வைத்த ராசி கண்ணா – கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!

0

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. தமிழிலும் தற்போது கால் பதித்து வரும் இவர் பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிகினி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

ராசி கண்ணா

தெலுங்கு நடிகையான ராசி கண்ணா மாடலிங் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். முதலில் அவர் ஹிந்தி படங்களில் தான் நடிக்க ஆரம்பித்தார். துணை நடிகையாக ஹிந்தியில் நடித்திருந்தார். ஆனாலும் அவருக்கு அந்த அளவிற்கு புகழ் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு தெலுங்கு துறையில் கால் பதித்த அவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். தெலுங்கில் செம ஹிட் அடித்த மனம் திரைப்படத்தில் சிறிய ரோலில் நடித்திருப்பார். அதன் பிறகு அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

தமிழில் வெளியான இமைக்க நொடிகள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி பதித்தார். முதல் படமே செம ஹிட் அடிக்க ராசி கண்ணாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அவரது கொழுக் மொழுக் உடலமைப்பிற்கும் அவரது சிரிப்பிற்கும் பல ரசிகர்கள் இருந்தனர்.

எல்லை மீறினால் கணக்கு முடக்கம் – இன்ஸ்டாகிராம் அதிரடி அறிவிப்பு!!

முன்னணி நடிகைகளே பொறாமை படும் அளவிற்கு இவரது வளர்ச்சி இருந்தது. அதன் பிறகு அயோக்கிய படத்தில் விஷாலுடன் ஜோடி சேர்ந்தார். படம் ஓடவில்லை என்றாலும் அவரின் நடிப்புக்கு தனி வரவேற்பு இருந்தது. இப்படி தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் கலக்கி வருகிறார் ராசி கண்ணா.

தற்போது தமிழிலும் தெலுங்கிலும் நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார். படத்திற்கு ஏற்ப கவர்ச்சி காட்டும் ராசி கண்ணா தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here