விஜய் டிவியில் நேரடியாக வெளியாகும் “ஏலே” திரைப்படம் – படக்குழு தகவல்!!

0

பூவரசம் பீப்பி மற்றும் சில்லுக்கருப்பட்டி ஆகிய படங்களின் இயக்குனர் ஹலிதா ஷமீம் தற்போது இயக்கியுள்ள “ஏலே”` திரைப்படம் தியேட்டர்களில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் நேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏலே திரைப்படம்:

இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்திரி இணைந்து வால்வாட்சர் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனமும் ஒய் நாட் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தாயாரித்துள்ள “ஏலே” என்ற திரைப்படத்தை ஹலிதா ஷமீம் இயக்கியுள்ளார். முன்னதாக அவர் இயக்கிய பூவரசம் பீப்பி மற்றும் சில்லு கருப்பட்டி ஆகிய படங்கள் மக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தன. ஏலே திரைப்படத்தில் சமுத்திரக்கனி, மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த்துள்ளனர்.

உத்ரகண்ட் பனிப்பாறை சரிவு – வெள்ளப்பெருக்கினால் மீட்புப்பணிகள் நிறுத்தம்!!

இந்நிலையில் இந்த படம் பிப்ரவரி 12ம் தேதி தியேட்டேர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல் காரணமாக படத்தினை திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழல் நிலவுகிறது. மாஸ்டர் படம் தியேட்டர்களில் ரிலீஸாகி 17 நாட்களில் OTT தளத்திலும் வெளியிடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த தியேட்டர் உரிமையாளர்கள் தற்போது ஒரு புதிய நிபந்தனையை தயாரிப்பாளர்களிடம் வைத்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இனிமேல் சிறிய பட்ஜெட் படங்கள் தியேட்டரில் வெளியாகி 30 நாட்களுக்கு பிறகும், பெரிய பட்ஜட் படங்கள் தியேட்டர்களில் வெளியாகி 50 நாட்களுக்கு பிறகும் தான் OTTயில் வெளியிடப்பட வேண்டும் என கூறி தயாரிப்பாளர்கள் இதற்கு அதிகாரபூர்வமான ஒப்புதலை அளிக்க வேண்டுமெனவும் கூறியுள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் தொடர்ந்து கருத்து மோதல் நடந்து வருகிறது. இது குறித்து தகவல் வெளியிட்ட படக்குழுவினர் ஆச்சர்யமான சில காரணங்களால் தற்போது தியேட்டர்களில் படத்தை வெளியிட முடியாத சூழல் உருவாகியுள்ளதாகவும், எனவே இந்த படம் விஜய் டிவியில் வரும் 28ம் தேதியன்று பகல் 3 மணிக்கு நேரடியாக வெளியிடப்படுமென்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here