ஆன்லைன் வகுப்புகள் புரியாததால் பள்ளி மாணவன் தற்கொலை – சென்னையில் நடந்த துயரம்!!

0
பிரபல நடிகர் மரணம்.. உடலை வாங்க முன்வராத உறவினர்கள் - திரையுலகை உலுக்கிய சோகம்!
பிரபல நடிகர் மரணம்.. உடலை வாங்க முன்வராத உறவினர்கள் - திரையுலகை உலுக்கிய சோகம்!

சென்னை அருகே ஆன்லைன் வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள் புரியவில்லை என்று கூறி 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் வகுப்புகள்:

கொரோனா கட்டுப்பாடு காலத்தில் பள்ளிகள் திறக்க முடியாத சூழல் ஏற்படவே மாணவர்ளுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு 9 முதல் 11ம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்கள் அனைவருக்கும் பள்ளியில் பாடங்கள் நடத்தப்பட்டதோடு வகுப்பறை தேர்வுகளும் நடத்தப்பட்டன.

புதிதாக 24 உள்நாட்டு விமானங்கள் இயக்கம் – ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவிப்பு!!

இந்நிலையில் சென்னை கொளத்தூரை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் பிரவீன் என்பவர் ஆன்லைன் வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்கள் சரிவர புரியாமல் தவித்ததாக கூறப்படுகிறது. டேனிஷ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த அவர் பள்ளிக்கு செல்ல துவங்கிய ஓரிரு நாட்களிலேயே மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அத்தனை பாடங்களையும் மூன்று மாத காலத்திற்குள் முழுமையாக படிக்க முடியாதோ என்று கவலையடைந்தவர் இன்று தனது வீட்டில் கடிதம் எழுதிவைத்து விட்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட பெற்றோர் கதறி அழுதனர். வணிகவியல் துறையில் பட்டம் பெற வேண்டுமென்ற தனது கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பாதத்தில் தான் தற்கொலை செய்து கொள்வதாக மாணவன் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here