மூக்குத்தி அம்மனுக்கு போட்டியாக போஸ் கொடுத்த ஷாலு சம்மு – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

0

தமிழில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ஷாலு ஷம்மு. மாடலிங் துறையில் இருந்த இவர் பட வாய்ப்புக்காக தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போதும் நயன்தாரா போலவே மூக்குத்தி அம்மன் கெட்டப்பில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.

ஷாலு சம்மு

மாடலிங் துறையில் இருந்து பல அழகி போட்டியில் கலந்து கொண்டவர் ஷாலு சம்மு. அப்பொழுது தான் அவருக்கு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே தனது நடிப்பு திறமையை அழகாக வெளிப்படுத்தி இருப்பார். அந்த படத்தில் சூரிக்கு ஜோடியாகவும் நடித்திருப்பார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. மேலும் அதன் பிறகு தெகிடி, தமிழுக்கு ‘எண் ஒன்றை அழுத்தவும்’ போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. காமெடி நடிகையாகவும் பல படங்களிலில் நடித்திருப்பார். மேலும் இவர் பிக் பாஸில் கலந்துகொள்ள போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் அவர் கலந்துகொள்ளாதது பலருக்கும் ஏமாற்றத்தையே தந்தது. சில காலமாக தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார். இதனால் பலரும் அவரை திட்டியும் வந்தனர். மேலும் மீரா மிதுனுக்கு எதிராக பல இன்டெர்வியூ கொடுத்து வந்தார்.

இதனால் பல பிரச்சனைகளும் ஏற்பட்டது. மேலும் மீரா மிதுன் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இவர் போலீசில் புகார் அளித்தார். இணையத்தில் வனிதா பிரச்சனைக்கு அடுத்து இதுவே காட்டுத்தீ போல பரவியது. இணையத்தில் இவர் ஒரு நபருடன் நடனமாடும் வீடியோவும் வெளியானது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஆரம்பத்தில் இவருக்கு இருந்த பெயரும் இதனால் கெட்டுப்போனது என்றே சொல்லலாம். மேலும் ஒரு பிரபல இயக்குனர் தன்னை படுக்கைக்கு வருமாறு கூறியதாக சர்ச்சையை கிளப்பினார்.

தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் ஷாலு தற்போது அடக்க ஒடுக்கமாக புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தில் உள்ள கெட்டப் போலவே போட்டோ வெளியிட்டுள்ளார். இதனால் பலரும் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here