நகங்களை அழகாக பராமரிப்பது எப்படி?? உங்களுக்காக சில டிப்ஸ்!!

0

பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஓன்று நகம் வளர்ப்பது. நகங்களை நீளமாக வளர்த்து அழகான வடிவங்களில் வெட்டி பிடித்த நிறத்திலும், தங்கள் உடைக்கு ஏற்ற நிறத்திலும் நைல்பாலீஷ் வைக்க மிகவும் ஆசைப்படுவார்கள். சிலருக்கு என்னதான் கவனமாக நகம் வளர்த்தாலும் சில நாட்களில் உடைந்து போய்விடும். அவர்களுக்காக சில சிம்பிள் டிப்ஸ் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

நகங்களை அழகாக பராமரிப்பது எப்படி?

நகங்களை வாரம் ஒரு முறையாவது வெட்டி சுத்தம் செய்ய வேண்டும். நகம் நீளமாக வளர்க்க விரும்புபவர்களும் வாரம் ஒருமுறை நகத்திற்கு எண்ணெய் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்தால் நமக்கு பிடித்த வடிவத்தில் சுலபமாக வெட்ட முடியும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறது என்றால் சிறிது பேபி ஆயிலில் நகங்களை ஊற வைக்க வேண்டும். நகங்கள் அழகு பெறுவதுடன் வலுவாகவும் இருக்கும். மேலும், கீழாநெல்லி வேரை எடுத்து காயவைத்து தேங்காய் எண்ணையில் காய்ச்சி நகத்திற்கு பயன்படுத்தும்போது நகம் நன்றாக வளரும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

சிலருக்கு எதிர்பாராத விதமாக நகங்களில் அடிபட்டு சில நாட்களில் அழுகி, நகத்தின் நிறம் கருப்பாக மாறிவிடும். இவ்வாறு இருப்பவர்கள் குங்குமப்பூ மற்றும் வெண்ணெயை கலந்து நகத்திற்கு தேய்த்து வந்தால் சில நாட்களில் நகம் பளபளப்பாகவும், வெள்ளையாகவும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

நகங்களில் சிதைவு ஏற்பட்டால் சூரியகாந்தி எண்ணையை தேய்த்தால் சரியாகிவிடும். சிலருக்கு நகங்கள் பளிச்சென்று இல்லாமல் பார்ப்பதற்கு மங்கிய பழுப்பு நிறமாக இருக்கும் அவர்களும் சூரியகாந்தி எண்ணையை அடிக்கடி நகங்களில் தேய்த்து வந்தால் வெண்மையாக மாறும்.

நகங்களில் இருக்கும் கிருமிகள் போக வெதுவெதுப்பான நீரில் துளசி மற்றும் புதினா இலைகளை போட்டு 10 நிமிடம் நகங்களை ஊறவைக்க வேண்டும். நகங்கள் உடையாமல் இருக்க ஆலிவ் எண்ணையை சூடுபடுத்தி சிறிதுநேரம் நகம் மற்றும் விரல்களில் நன்றாக மசாஜ் செய்து ஒரு பஞ்சால் துடைத்தால் உடையாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here