Saturday, May 18, 2024

நிவர் புயல் எதிரொலி – சென்னையில் இருந்து செல்லும் 6 விரைவு ரயில்களின் சேவை ரத்து !!

Must Read

நிவர் புயல் நாளை மறுநாள் நவம்பர் 25 ஆம் தேதி கரையை கடக்க உள்ள நிலையில், சென்னையில் இருந்து செல்லும் 6 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நிவர் புயல்:

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலைபெற்றுள்ளது, இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெற்று புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிவர் புயல் வருகின்ற 25 ஆம் தேதி கரையை கடக்க உள்ளது. நிவர் புயல், மகாபலிபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த நிலையில், நிவர் புயல் எச்சரிக்கையினால் சென்னையில் இருந்து செல்லும் 6 விரைவு ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை காரணமாக 9 விரைவு ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி-சென்னை இடையிலான ரயில்களும் முழுவதுவமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தஞ்சை-சென்னை, சென்னை-தஞ்சை ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மைசூரு-மயிலாடுதுறை ரயில் சேவை நவம்பர் 24 ஆம் தேதி திருச்சியுடன் நிறுத்தப்படுகிறது. மயிலாடுதுறை-மைசூரு ரயில் சேவை நவம்பர் 25 ஆம் தேதி திருச்சியில் நிறுத்தப்படுகிறது. எர்ணாகுளம்-காரைக்கால் விரைவு ரயில் சேவை நவம்பர் 24 ஆம் தேதி திருச்சியுடன் நிறுத்தப்படுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நிவர் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த புயலால் பாதிப்புகள் ஏற்படக் கூடிய மாவட்டங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிகளவு மழை பெய்யக்கூடும் என்பதால் கடலூர் மாவட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள்., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

நீண்டகாலமாக தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -