1 முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைக்கும் பணிகள் நிறைவு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

0

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டங்கள் குறைக்கும் பணிகள் நிறைவு பெற்று உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் போது குறைந்த நாட்கள் மட்டுமே இருக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பாடத்திட்டங்கள் குறைப்பு:

கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் பள்ளி ஆண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் வகுப்புகள் தொடங்கும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் இம்முறை கொரோனா பரவலால் செப்டம்பர் மாதம் ஆகியும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாறாக செப்.21 முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அவரவர் விருப்பத்தின் படி பள்ளிக்கு வந்து ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டு தீர்த்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப் பூர்வ அனுமதி வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் குறைந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கும் போது குறைந்த அளவிலான நாட்கள் மட்டுமே இருக்கும் என்பதால் பாடத்திட்டங்கள் குறைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை – 6 முன்னாள் நீதிபதிகள் கடிதம்!!

இந்நிலையில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்து உள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. கணிசமான அளவில் பாடத்திட்டங்களை குறைக்கும் பணியில் SCRET ஈடுபட்டு இருந்ததாகவும், மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here