நடிகர் சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை – 6 முன்னாள் நீதிபதிகள் கடிதம்!!

1
actor suriya
actor suriya

நீட் தேர்வு தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என முன்னாள் நீதிபதிகள் 6 பேர் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. சூர்யா மீது வழக்கு தொடர நீதிபதி சுப்ரமணியம் வலியுறுத்தி இருந்த நிலையில் இக்கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

நடிகர் சூர்யா – நீட் தேர்வு:

நாடு முழுவதும் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் மாணவர்களின் எதிர்ப்புகளையும் மீறி நேற்று மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது. கொரோனா பரவலுக்கு மத்தியில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டடன. இதற்கிடையில் தமிழகத்தில் சனிக்கிழமை (தேர்வுக்கு முந்தைய நாள்) ஒரே நாளில் 3 மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில், கொரோனா உயிர் பயத்தினால் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம் மாணவர்களை மட்டும் அச்சமில்லாமல் போய் தேர்வெழுத கூறி தீர்ப்பு வழங்கியுள்ளது என தெரிவித்திருந்தார். அவருக்கு பல தரப்பினரும் ஆதரவு அளித்த நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருமாறு கோரிக்கை வைத்து தலைமை நீதிபதி சாஹிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். இது நீதிமன்றத்தின் நேர்மையையும், சிரத்தையும் அவமதிப்பதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

‘இந்த ரணகளத்துலயும் ஒரு கிளுகிளுப்பா’ – ரம்யா பாண்டியனை விளாசிய நெட்டிசன்கள்!!

இந்நிலையில் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என முன்னாள் நீதிபதிகள் சந்துரு, பாட்ஷா, சுதந்திரம், கண்ணன், ஹரிபரந்தாமன், அக்பர் அலி ஆகிய 6 பேர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் மாணவர்கள் மரணம் காரணமாக சூர்யா தெரிவித்த கருத்தினை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும், நீதிபதி சுப்ரமணியம் கூறியுள்ளதை போல் எந்த நடவடிக்கையும் தேவையில்லை என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக #TNStandWithSuriya என்கிற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 COMMENT

  1. நீதிபதி தீர்ப்பை விமர்சிக்க உரிமை இருக்குமானால் நீதிபதிகளின் பதவிக்கு உண்டா மரியாதை..???

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here