நாடு முழுவதும் அக்.1 முதல் தியேட்டர்கள் திறப்பு?? மத்திய அரசு விளக்கம்!!

0

அக்டோபர் 1 முதல் நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. தியேட்டர்கள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் செய்யப்படவில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

தியேட்டர்கள் திறப்பு:

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் பல பிரபலங்களில் திரைப்படங்களும் OTT இல் ரிலீஸ் ஆகி வருகின்றன. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதிலும், இக்காலத்தில் அது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால் அதனை நம்பி உள்ள தொழிலாளர்கள் குடும்பம் பாதிக்கப்படும் என கூறிய திரையரங்க உரிமையாளர்கள் விரைந்து அதற்கான அனுமதியை அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

cinema theatre
cinema theatre

மேலும் ஐபிஎல், ஒலிம்பிக் போன்ற விளையாட்டு போட்டிகளையும் திரையரங்குகளில் ஒளிபரப்ப அனுமதி கோரி உள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் அக்டோபர் 1 முதல் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. குறிப்பிட்ட அளவு சீட்கள், சமூக இடைவெளி, முகக்கவசங்கள் உட்பட பல்வேறு விதிகளை பின்பற்றி திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.

கோவாவில் குதூகலிக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் – வைரலாகும் புகைப்படம்!!

இந்நிலையில் அந்த தகவலை மத்திய அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. மேலும் அக்டோபர் 1 முதல் தியேட்டர்கள் திறப்பு என வெளியான தகவல் பொய்யானது, அது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here