17 எம்.பி.களுக்கு கொரோனா தொற்று உறுதி – கூட்டத்தொடருக்கு முந்தைய சோதனையின் ரிசல்ட்!!

0

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கி உள்ள நிலையில் அதற்கு முன்னராக நடத்தப்பட்ட கட்டாய சோதனைகளில் 17 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு (எம்.பி) கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அவர்கள் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

நாடாளுமன்ற கூட்டத்தொடர்:

கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கி உள்ளது. முதல் நாளான இன்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் கன்னியாகுமரி மக்களவை எம்.பி வசந்தகுமார் ஆகியோருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்பு சபாநாயகர் நாளை மதியம் 2 மணிக்கு கூட்டத்தொடரை ஒத்திவைத்தார். கொரோனா அச்சம் நிலவுவதால் கூட்டத்தில் பங்கேற்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், ஊழியர்கள் என அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் முடிவில் 17 எம்.பி.க்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகபட்சமாக 12 பேரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் 2 எம்.பி.க்கள், சிவசேனா, திமுக மற்றும் ஆர்.எல்.பி கட்சியை சேர்ந்த தலா 1 எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த செப்டம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற சோதனை முடிவில் இது தெரிய வந்துள்ளது.

இந்திய நாடாளுமன்ற 785 எம்.பி.க்களில் சுமார் 200 பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள். சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் படி, இந்த வயதினருக்கு கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட ஏழு மத்திய அமைச்சர்கள் மற்றும் சுமார் 25 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நீட் எதிர்ப்பு மாஸ்க்குகளுடன் அணிவகுத்த எம்எல்ஏ.,க்கள் – கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம்!!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் நடைபெறுகிறது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரு சபைகளின் அறைகளிலும் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்றி அமர்ந்துள்ளனர். அவர்களின் வருகையை பதிவு செய்ய ஒரு மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இருக்கைகள் பாலி கார்பன் தாள்களால் அமைக்கப்பட்டு உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here