Saturday, September 26, 2020

நீட் எதிர்ப்பு மாஸ்க்குகளுடன் அணிவகுத்த எம்எல்ஏக்கள் – கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம்!!

Must Read

முதல் வெற்றி பெறப்போவது யார்?? இன்று ஹைதராபாத் vs கொல்கத்தா பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால் இந்த...

நெல்லை அருகே பயங்கரம் – இரு பெண்கள் தலை துண்டித்து கொடூர கொலை!!

இந்த வருடம் (2020) இல் பல கோர சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். இதனை தொடர்ந்து தற்போது நெல்லை அருகே 2 பெண்களை முன்பகை காரணமாக...

சந்தோஷத்தில் மூழ்கிய நகைப்பிரியர்கள் – மீண்டும் சரிவில் தங்கத்தின் விலை!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று சற்று விலை...

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று முதல் நாள் நடைபெற்ற சட்டப்பேரவைகூட்டத்தில் கொரோனா காரணமாக மறைந்தவர்களுக்கு இரங்கல் செலுத்தப்பட்டது. பின்பு சபாநாயகர் தனபால் நாளைக்கு சட்டப்பேரவை கூட்டத்தை ஒத்திவைத்தார்.

சட்டப்பேரவை கூட்டம்:

கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு பின் சட்டப்பேரவை கூட்டம் நடத்த அரசு முடிவு செய்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு சட்டப்பேரவை கூட்டம் நடத்த தலைமை செயலகத்தில் போதிய வசதி இல்லாத காரணத்தால் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

tamilandu assembly meet
tamilandu assembly meet

இந்த அரங்கத்தில் நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டம் இது தான். நாளை நடைபெறும் கூட்டத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் துணைநிலை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார். இப்படியாக இருக்க வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான தி.மு.க சார்பில் இருபதிற்கும் மேற்பட்ட பிரச்சனைகள் குறித்து கேள்வி நேரத்தில் பேசவுள்ளனர். இதன் மூலமாக வரும் நாட்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற கூட்டங்களில் காரசாரமான விவாதங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சி போராட்டம்:

இன்று நடைபெற இருந்த கூட்டத்திற்கு வந்த எதிர்க்கட்சி தி.மு.க எம்எல்ஏ.,க்கள் நீட் தேர்வை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?? தெரிஞ்சுக்கலாம் வாங்க!!

‘BAN NEET’ என்கிற வாசகங்களுடன் கூடிய முகக்கவசங்களை அணிந்து வந்தனர். இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு காணப்பட்டது.

இன்றைய கூட்டம்:

இன்று முதல் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. முதல் நாளான இன்று கொரோனா நோய் பரவல் காரணமாக மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்தகுமார் மற்றும் மறைந்த 23 எம்எல்ஏகளுக்கும் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்தொடரை நாளை காலை 10 மணிக்கு சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

முதல் வெற்றி பெறப்போவது யார்?? இன்று ஹைதராபாத் vs கொல்கத்தா பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால் இந்த...

நெல்லை அருகே பயங்கரம் – இரு பெண்கள் தலை துண்டித்து கொடூர கொலை!!

இந்த வருடம் (2020) இல் பல கோர சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். இதனை தொடர்ந்து தற்போது நெல்லை அருகே 2 பெண்களை முன்பகை காரணமாக வெடிகுண்டு வீசி பின்னர் அரிவாளால் ஒரு...

சந்தோஷத்தில் மூழ்கிய நகைப்பிரியர்கள் – மீண்டும் சரிவில் தங்கத்தின் விலை!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று சற்று விலை அதிகரித்து இருந்த நிலையில் இன்று மீண்டும்...

போதைப்பொருள் வழக்கு விசாரணை – தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் நேரில் ஆஜர்!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் போதைப்பொருட்கள் தலையீடு இருப்பது தெரிய வந்தது. இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி...

காருக்குள் வருங்கால கணவருடன் போட்டோ எடுத்த சித்ரா – இணையத்தில் வைரல்!!

தமிழ் திரையுலகில் வெள்ளித்திரை நட்சத்திரங்களை போலவே சின்னத்திரை நட்சத்திரங்களும் கலக்கி வருகின்றனர். மேலும் சின்னத்திரை நடிகைகளுக்கும் தற்போது மவுசு அதிகம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவிற்கு தனி ரசிகர் பட்டாளமே...

More Articles Like This