சசிகலாவிற்கு தீவிர சிகிச்சை – கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியீடு!!

0

சிறையில் சசிகலாவிற்கு காய்ச்சல் ஏற்பட்ட காரணத்தினால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய அவருக்கு RAPID மற்றும் RT-PCR பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.

சசிகலா:

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு பல சம்பவங்கள் தமிழகத்தில் நடந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகிவிட்டார். சசிகலா சிறைக்கு சென்று விட்டார் என பல விஷயங்கள் அரங்கேறிவிட்டது. தற்போது சசிகளவிற்கு நீதிமன்றம் விடுதலை அளிக்க தீர்ப்பு வழங்கியது. அதன்படி சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை ஆவர் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் சசிகலாவிற்கு கடந்த 1 வாரமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு பெங்களூரு அரசு மருத்துமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய அவருக்கு RAPID மற்றும் RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றே முடிவுகள் வந்துள்ளது. மேலும் பெங்களூரு அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர் மனோஜ் கூறுகையில் சசிகலாவிற்கு ஆக்சிஜன் உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார். மேலும் அவருக்கு தொடர் சிகிச்சல் தேவை படவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து சசிகலாவின் தம்பி திவாகரன் கூறுகையில் சசிகலா விரைவில் விடுதலை ஆகவிருக்கும் நிலையில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படவுள்ளது போல் தெரிகிறது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர் உயிரிழப்பு – தெலுங்கானாவில் அதிர்ச்சி!!

மேலும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட போது அவருக்கு சிறையில் சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை. மேலும் அவருக்கு நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்ட பிறகு தான் சசிகலாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறை மருத்துவமனையில் அவருக்கு சாதாரண எக்ஸ்ரே மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. சிடி ஸ்கேன் எடுப்பதற்கு கோர்ட் அனுமதி தேவை என்று கூறிவிட்டார்கள். பணம் பாதாளம் வரை பாயும் என்று கூறுவார்கள் ஆனால் இங்கு எதுவரை சென்றுள்ளது என்று தெரியவில்லை. மூச்சுத்திணறல் ஏற்பட்டால் முதலில் சிடி ஸ்கேன் எடுக்கவேண்டும் என்று கூட தெரியவில்லை என்று தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here