முக்கிய வீரர்களை கழட்டிவிடும் ஆர்சிபி – கடுப்பில் ரசிகர்கள்!!

0

வரப்போகும் ஐபிஎல் போட்டிக்காக அடுத்த மாதம் மினி ஏலம் நடக்கவிருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை விடுவித்து வருகின்றனர். பெங்களூரு அணி பல முக்கிய வீரர்களை விடுத்துள்ளது. இதனால் அந்த அணியின் ரசிகர்களை கடுப்பாகியுள்ளனர்.

ஐபிஎல்:

இந்தியாவில் வைத்து கடந்த 2008ம் ஆண்டில் இருந்து ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் போட்டி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் பிசிசிஐ ஐக்கிய அரபில் ஐபிஎல் போட்டிகளை சிறப்பாக நடத்தியது. ஆனால் கடந்த சீசனில் மும்பை மற்றும் டெல்லி அணி மட்டுமே மிக சிறப்பாக விளையாடியது என்றே கூறலாம். ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சிஎஸ்கே அணி லீக் சுற்றுளையே வெளியேறியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது அந்த அணியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதனால் இந்த ஆண்டு வீரர்களை ஏலம் முறையில் எடுக்கவேண்டும் என்று அனைவரும் கூறிவந்தனர். ஆனால் தற்போது அதற்கான கால அவகாசம் இல்லை என்று கூறி பிசிசிஐ அதை மறுத்தது. எனவே தற்போது அதற்காக அடுத்த மாதம் மினி ஏலம் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை கழட்டிவிட்டு வருகின்றனர்.

முக்கிய வீரர்களை கழட்டிவி விட்ட ஆர்சிபி:

இந்த வரிசையில் பெங்களூரு அணி மிக முக்கியமான 10 வீரர்களை கழட்டிவிட்டுள்ளனர். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இது வரை பெங்களூரு அணி 1 முறை கூட கோப்பையை கைப்பற்றியது இல்லை. இறுதி போட்டி வரை செல்லும் ஆனால் இறுதி போட்டியில் கோப்பையை நழுவவிடும் இதுவே இந்த அணி வாடிக்கையாக வைத்திருக்கிறது. இந்த அணி தற்போது 10 முக்கிய வீரர்களை விடுவித்துள்ளதால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கோப்பையை கைப்பற்றுவது சந்தேகமே. மேலும் இதுகுறித்து பெங்களூரு அணி ரசிகர்கள் செம கடுப்பாகி உள்ளனர். தற்போது பெங்களூரு அணியில் இருப்புத்தொகையாக 6.4 கோடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சசிகலாவிற்கு தீவிர சிகிச்சை – கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியீடு!!

பெங்களூரு அணி விடுவித்த வீரர்கள்:

ஆரோன் பின்ச், கிரிஸ் மோரிஸ், உடானா, மொய்ன் அலி, பவன் நேகி, குர்கிரீட் சிங் மான், சிவம் துபே, ஸ்டைன், பார்த்தீவ் பட்டேல், உமேஷ் யாதவ்.

பெங்களூரு அணி தக்கவைத்துள்ள வீரர்கள்:

விராட் கோலி, டிவில்லியர்ஸ், சாஹல், தேவ்தட் படிக்கல், நவ்தீப் சைனி, வாசிங்டன் சுந்தர், முகமது சிராஜ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா, ஜோஸ் பிலிப், சபாஷ் அகமத், பவன் தேஸ்பண்டே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here