14வது ஐபிஎல் தொடர் – வலிமையாக காணப்படும் சன் ரைசர்ஸ் அணி!!

0

தற்போது இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்காக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை விடுவித்து வருகிறது. தற்போது ஹைதெராபாத் அணியும் பல வீரர்களை விடுவித்துள்ளது. இருந்தும் அந்த அணி வலிமையாக காணப்படுகிறது.

ஐபிஎல்:

14வது ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடக்கவிருக்கிறது. இந்த தொடர் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு மெகா ஏலம் நடத்த கால அவகாசம் இல்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது. காரணம் இந்தியா அணி இங்கிலாந்து அணியுடன் போட்டிகளை மார்ச் மாதத்தில் விளையாட உள்ளது. அதனால் அடுத்த மாதம் 11ம் தேதி அன்று மினி ஏலம் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனால் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத விபீரர்களை விடுவித்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் விடுவித்த வீரர்களின் பெயர் பட்டியல் மற்றும் தக்கவைத்துள்ள வீரர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்கவும் ஐபிஎல் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி அனைத்து அணிகளும் தங்களது அணி வீரர்களின் விவரங்களை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றி அசத்திய ஹைதெராபாத் அணி தற்போது தங்கள் அணி வீரர்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.

முக்கிய வீரர்களை கழட்டிவிடும் ஆர்சிபி – கடுப்பில் ரசிகர்கள்!!

இந்த அணி கடந்த ஆண்டு நடத்த ஐபிஎல் தொடரில் தொடக்கத்தில் சற்று சொதப்பினாலும்இரண்டாவது சுற்றுக்கு பின்பு மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியது. மேலும் இந்த அணி அரையிறுதி வரை சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த அணி பல வீரர்களை விடுத்துள்ளது. இருந்தும் இந்த அணி தற்போது பார்ப்பதற்கு மிக வலிமையாக உள்ளது. எனவே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஹைதெராபாத் அணி விடுவித்த வீரர்கள்:

பேபியன் ஆலன், பில்லி ஸ்டேன்லெக், யாதவ், சந்தீப், பிரித்விராஜ்.

ஹைதெராபாத் அணி தக்கவைத்துள்ள வீரர்கள்:

கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர், ரஷீத் கான், நடராஜன், ஜேசன் ஹோல்டர், பேர்ஸ்டோ, விரித்திமான் சாஹா உள்ளிட்ட வீரர்களை தக்கவைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here