கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார பணியாளர் உயிரிழப்பு – தெலுங்கானாவில் அதிர்ச்சி!!

0

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரபணியாளர் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார். தடுப்பூசி போட்டுகொண்ட பிறகு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தடுப்பூசிக்கு ஒருவர் பலி

இந்தியாவில் கடந்த 17 ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது இந்த தடுப்பூசியில் சில பக்கவிளைவுகள் இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. தலைவலி, காய்ச்சல், மயக்கம் ஆகிய லேசான அறிகுறிகள் மட்டுமே ஏற்படும் என கூறியிருந்தது.

14வது ஐபிஎல் தொடர் – சிஎஸ்கே அணியில் நீடிப்பாரா ரெய்னா?? தோனி கையில் முடிவு!!

ஆனால் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரபணியாளர் ஒருவர் தெலுங்கானாவில் இறந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் இறந்தது தடுப்பூசி போட்டுக்கொண்டதினால் அல்ல என அம்மாநில நிர்வாகம் மருத்துவருகிறது. உத்திரபிரதேசம் மாநிலத்திலும் அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக இருந்த 40 வயதுள்ள ஒருவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டதை தொடர்ந்து அவர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தெலுங்கானாவை சேர்ந்த சுகாதாரபணியாளரும் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவற்றை கவனத்தை கொண்டு அரசு வேண்டிய முன்னெச்சரிக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here