இன்ஸ்டாவில் 15 மில்லியன் பாலோவர்ஸை பெற்று அசத்திய சமந்தா – குவியும் வாழ்த்துக்கள்!!

0

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் 15 மில்லியன் பாலோவர்சை பெட்ரி அசத்தியுள்ளார். பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். மேலும் சமந்தா தனது ரசிகர்களுக்கு நன்றி கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சமந்தா

மாஸ்கோவில் காவேரி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சமந்தா. அந்த படம் ஹிட் அடிக்கவில்லை என்றாலும் அவரது நடிப்பு அந்த படத்தில் பேசப்பட்டது. அதன் பிறகு தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு திரையில் கால் பதித்தார்.

தெலுங்கில் அவர் நடித்த முதல் படத்தில் நாகசைதன்யா தான் அவருக்கு ஜோடி. அப்பொழுது ஆரம்பித்த நட்பு தான் இப்பொழுது திருமணத்தில் முடிந்துள்ளது. அடுத்தடுத்து அவர் சின்ன படங்களில் நடித்தாலும் அவருக்கென்று ரசிகர்கள் உருவாக தொடங்கினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவர் தெலுங்கில் நடித்த பிருந்தாவனம் திரைப்படம் மாஸ் ஹிட். அதன் பிறகு தான் சமந்தாவிற்கு படவாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்தார் சம்மு. தமிழிலும் ஷம்முவிற்கு வாய்ப்புகள் குவிந்தன.

நானி திரைப்படம் மூலம் தான் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்திழுத்தார் சமந்தா. என்ன அழகு, என்ன நடிப்பு அந்த ஒரு படத்திலேயே முன்னணி நைட்க்கையாக வலம் வந்தார். எடுத்த எடுப்பிலேயே விஜய் உடன் ஜோடி சேர்ந்தார். இதுவரை மூன்று படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ரசிகர்களை சந்தித்த விஜய் – வைரலாகும் புகைப்படம்!!

samantha latest pics
samantha latest pics

அதன் பிறகு சமந்தா ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போனார். மேலும் திருமணம் ஆன உடன் சமந்தா சினிமா பக்கம் வர மாட்டார் என்று நினைத்தால் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவரது மார்க்கெட்டும் குறையாமல் மேலும் அதிகரித்து தான் உள்ளது.

இந்நிலையில் தற்போது பல போட்டோஷூட்களை தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் சமந்தா. தற்போது அவரின் இன்ஸ்டாகிராமில் 15 மில்லியன் பாலோவர்ஸை பெற்று அசத்தியுள்ளார் சமந்தா. இதற்கு ஒரு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

சமந்தா கூறியதாவது, தனக்கு இத்தனை நாளாக சப்போர்ட் செய்த உறவினர்கருக்கும், தனது ரசிகர்களுக்கும் மிக்க நன்றி என்று கூறியுள்ளார். ரசிகர்களின் ஒவ்வொரு தனிப்பட்ட லைக்ஸ், கமன்ட் அனைத்தும் தனக்கு ஊக்கிவிப்பது போல இருந்தது என்றும் கூறி தனது நன்றியை கூறியுள்ளார் சமந்தா. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here