சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ரசிகர்களை சந்தித்த விஜய் – வைரலாகும் புகைப்படம்!!

0

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் சென்னை பனையூரில் உள்ள தனது வீட்டில் நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்துள்ளார். மேலும் ரசிகர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார் நடிகர் விஜய்.

ரசிகர்களுடன் நடிகர் விஜய்

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பின்பு அதை கொண்டாடும் விதமாக நடிகர் விஜய் சென்னை பனையூரில் உள்ள தனது வீட்டில் ரசிகர்களை சந்தித்து புகைப்படங்களை எடுத்துள்ளார். இந்த சந்திப்பில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விஜய் ரசிகர்மன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் கலந்து கொண்டு விஜய்யுடன் புகைப்படங்களை எடுத்து வருகின்றனர். இந்த வகையில் 300க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பனையூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு குவிந்துள்ளனர்.

குக் வித் கோமாளி அஸ்வினை பற்றி மனம் திறக்கும் சுனிதா – இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

விஜய் காரில் செல்லும் காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது. விஜய் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் படு ஸ்டைல் ஆக இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கு முன்னதாக நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பின் போது அவர் ரசிகர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அப்போது ஒரு வாகனத்தின் மீது விஜய் ஏறி நின்று அங்கிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படம் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பொக்கிஷமாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here