குக் வித் கோமாளி அஸ்வினை பற்றி மனம் திறக்கும் சுனிதா – இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்குபெறும் நடன கலைஞர் தான் சுனிதா. ரசிகைகளின் கனவு கண்ணனாக இருக்கும் அஸ்வினுடனான தன்னுடைய உறவை பற்றி கூறியுள்ளார்.

சுனிதா கூறிய தகவல்

அசாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் சுனிதா கோகோய். நடன கலைஞரான இவர் விஜய் டிவியில் நடைபெற்ற நடன போட்டியில் பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் அதே தொலைக்காட்சியில் நடைபெற்ற நடன போட்டிக்கு நடுவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பேச தெரியாத தமிழ் மொழியை இவர் பேசுவதற்கு முயற்சி செய்யும் காட்சியை காணும்போதே அனைவருக்கும் சிரிப்பு வந்துவிடும். நடனத்திலும் கிடைக்காத ரசிகர்களை ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் சம்பாதித்துள்ளார் சுனிதா.

பிங்க் நிற ஸ்லீவ்லெஸ் உடையில் ஜம்முனு போஸ் கொடுத்த கீர்த்தி – சொக்கிப்போன ரசிகர்கள்!!

இந்நிலையில் நேற்று முன்தினம் சுனிதா தனது வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறினார். அந்த லைவ்வில், ‘குக் வித் கோமாளி’ அஸ்வினை சுனிதா காதலிக்கிறாரா? என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து சுனிதா கூறும்போது, ‘அஸ்வினை காதலிக்கவில்லை என்றும் அவர் ஒரு நல்ல நண்பர்’ என்றும் அவர் கூறியுள்ளார். ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் அஸ்வினுக்காக சுனிதா கூறும் 10 ரூபாய் கவிதைகள், அஸ்வினுக்காக ஷிவாங்கி மற்றும் சுனிதா அடித்துக்கொள்ளும் காட்சி மக்கள் மத்தியில் பெரிதும் ரசிக்கப்பட்ட ஒன்றாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here