‘மாணவர்களுக்கு கொரோனாவுக்கான அச்சம் தேவையில்லை’ – அமைச்சர் செங்கோட்டையன் கருத்து!!

0

விருப்பமுள்ள மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வருவதால் கொரோனாவுக்கான அச்சம் தேவையில்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் கருத்து

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட, முதலிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தி, அதை உயர்நிலை பள்ளியாக அறிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அவருடன் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ. நடராஜன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி ஆகியோர் பங்குபெற்றனர்.

சன்னி லியோன் மீது பணமோசடி புகார் – கேரளாவில் பரபரப்பு!!

விழா முடிந்ததும் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். முக்கியமாக விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளுக்கான பயிர்கடனை தள்ளுபடி செய்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக முதல் முறையாக கால்நடை பூங்கா ஒன்றை சேலம் மாவட்டத்தில் நிறுவி வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் விவசாயிகளின் நலன் கருதி டெல்டா மாவட்டங்களை சிறப்பு மண்டலமாக அறிவித்துள்ளார். மாநிலத்தின் வறட்சியான பகுதிகளில் குடிமராமாத்து திட்டங்களை கொண்டுவந்துள்ளார். ஆளுமை திறனில் எல்லாத்துறைகளிலும், இந்தியாவிலிருக்கும் எல்லா மாநிலங்களை விட, நமது மாநிலம் தான் முதலிடத்திலுள்ளது’ என பேசினார். பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று மாநில அரசு அறிவித்துள்ளதினால் கொரோனா தொற்று குறித்து மாணவர்கள் அச்சப்படத்தேவையில்லை’ என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here