ஐஆர்சிடிசி செயலியில் பேருந்துகளையும் முன்பதிவு செய்யலாம்’ – புதிய அப்டேட்டால் பயனாளர்கள் குஷி!!

0

ரயில் வண்டியை முன்பதிவு செய்வதற்காக பயன்படும் செயலி தான் ஐஆர்சிடிசி. தற்போது அந்த செயலி புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது. இதனால் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஐஆர்சிடிசி:

ரயில் வண்டியை முன்பதிவு செய்வதற்காக பயன்படும்  ஐஆர்சிடிசி செயலி மக்களுக்கு மிகவும் பயன்பட்டு வருகிறது. இந்த செயலி மூலம் ரயில்வண்டியை மிக எளிமையான முறையில் பயணிகள் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த செயலியில் ரயில் வண்டி மட்டுமின்றி விமானங்களுக்கும் முன்பதிவு செய்யும் வசதியை ஐஆர்சிடிசி நிறுவனம் செய்தது. இதனால் பயணிகள் மேலும் பயனடைந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பேருந்து முன்பதிவு:

தற்போது இந்த ஐஆர்சிடிசி நிறுவனம் தனது செயலியை அப்டேட் செய்துள்ளது. இதில் புது அப்டேடாக ஐஆர்சிடிசி செயலி மூலம் இனி பேருந்துகளை முன்பதிவு செய்யலாம் என்று அறிவித்தது. ஐஆர்சிடிசி செயலியின் மூலம் பேருந்துகளை முன்பதிவு செய்வதற்கான பணிகள் அனைத்தும் வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#INDvsENG டெஸ்ட் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவு – இங்கிலாந்து அணி 555 ரன்களை குவிப்பு!!

பணிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு பயணிகள் அனைவரும் இனி ஐஆர்சிடிசி செயலி மூலம் பேருந்துகளுக்கான முன்பதிவை மேற்கொள்ளலாம். இந்த சேவைக்காக 22 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் சாலை போக்குவரத்து மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளதாக ஐஆர்சிடி நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here