Sunday, May 5, 2024

சபரிமலையில் கூடுதல் பக்தர்களுக்கு முன்பதிவு விரைவில் துவக்கம் – போர்ட் தலைவர் அறிவிப்பு!!

Must Read

சபரிமலையில் கூடுதலான பக்தர்களை எதிர்பார்ப்பதாகவும், கூடுதல் பக்தர்களுக்கான முன்பதிவு அரசு பரிந்துரைத்ததும் துவங்கப்படும் என்று சபரிமலை தேவஸ்தான போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். கொரோன பரவல் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

சபரிமலையில் பக்தர்கள் தரிசனம்:

தற்போது கார்த்திகை துவங்கியுள்ளதால் பக்தர்கள் அனைவரும் சபரிமலைக்கு மாலை அணிந்து வழிபட உள்ளனர். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கேரள அரசு சார்பில் பல வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது வரை 13 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

சபரிமலையில் பக்தர்களுக்காக பல வித முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கூடுதல் பக்கதர்களை எதிர்பார்ப்பதாகவும், அதற்கான பணிகளில் தேவஸ்தானம் இறங்கியுள்ளதாகவும் சபரிமலை தேவஸ்தான தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.

போர்ட் தலைவர் அறிவுறுத்தல்:

அவர் பேசுகையில், “தற்போது வரை சபரிமலையில் 13 ஆயிரத்து 529 பக்தர்கள் ஐயப்பனை தரிசித்துள்ளனர். இதனால் தேவஸ்தானத்திற்கு 2 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. மேலும், இன்னும் கூடுதலான பக்தர்களை எதிர்பார்க்கிறோம். பக்தர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளோம். ஆனால், அரசு அனுமதித்தால் மட்டுமே அதற்கான பணிகளில் இறங்குவோம். அரசு இது குறித்து இறுதி முடிவு அறிவித்தால் முன்பதிவிற்கான பணிகளை துவக்க உள்ளோம். இது ஒரு இக்கட்டான சூழ்நிலை தான் என்றாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றபட்டு வருகின்றது”

இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் & T20 தொடர் – டேவிட் வார்னர் விலகல்!!

“புதிய முயற்சியாக தபால் பிரசாதத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டாலும், சன்னிதானத்தில் கூட்டம் கூட அனுமதி கிடையாது. முன்பதிவு துவக்கப்பட்டால் கேரள போலீஸ் துறையினர் தேவஸ்தானத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளோம்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -