கர்ப்பமான மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்த தனம் – குஷியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல எதிர்பாராத திருப்பங்கள் நாளுக்கு நாள் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. அதாவது தனம் கர்பமடைவாரா?? இல்லையா?? என்று பலரும் காத்திருந்த நிலையில் விஜய் டிவி ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா வீட்டிற்கு வந்ததுல இருந்து நிறைய பிரச்சனைகள் வந்துகொண்டுள்ளது. மீனா வழக்கம் போல தனது குறையை பாடிக்கொண்டு தான் உள்ளார். மீனா தன்னை பார்த்துக்கொள்ள இங்கு யாருமே கிடையாது என்று புலம்பிக்கொண்டும் இருக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எங்க வீட்டிலேயே இருந்து இருக்கலாம் என்றும் கூறுகிறார். ஆனால் முல்லை தனத்திற்கு சப்போர்ட் செய்து பேசுவதால் மீனா மேலும் கோவமடைகிறார். மறுபக்கம் தனம் தலை சுற்றல், வாந்தி என இருக்க அவருக்கு நாள் வேறு தள்ளி போவதை சந்தேகித்து தன் அத்தையிடம் மறைமுகமாக கேட்க இது கர்ப்பம் தான் என்று கூறுகிறார்.

pandian stores

இதனால் பதட்டமடையும் தனம் மெடிகளுக்கு டெஸ்ட் கார்டு வாங்க செல்கிறார். அப்பொழுது பார்த்து குழந்தை அழுக மீனா குழந்தையை பார்த்துக்கொள்ள திணறுகிறார். மேலும் தனம் இல்லாததை பார்த்து கோவமும் அடைகிறார். தனத்தை கண்டபடி பேசி தன் வீட்டிலேயே இருந்து இருக்கலாம் என்றும் சலித்து கொள்கிறார் மீனா.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் அடிக்கடி தலை சுற்றுவதால் தனத்திற்கு குழந்தையை பார்த்துக்கொள்ள முடியாமல் போகிறது. இதனால் தனம் தன் மீது பொறாமை படுவதாக நினைத்து கொள்கிறார் மீனா. மேலும் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

pandian stores

அதில் தனத்தின் டெஸ்ட் கார்டில் பாசிட்டிவ் என்று வருகிறது. இதனால் மீனா ஷாக் ஆகிறார். அவருக்கு பழைய நியாபகங்கள் எல்லாம் திரும்புகிறது. தம்பிகளுக்காக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்தது. தன் தாய் குழந்தைக்காக சண்டை போட்டது எல்லாம் நியாபத்துக்கு வர தான் கர்ப்பமாக இருப்பதை பார்த்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறார்.

‘நான் அம்மாவாக போறேன்’ என்று கண்ணீர் விட்டும் அழுகிறார் தனம். இந்த ப்ரோமோ பலரையும் கண்கலங்க வைத்துள்ளது என்றே சொல்லலாம். எப்படியோ கடைசியாக தனம் கர்ப்பமானதால் ரசிகர்கள் பலரும் குஷியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here