இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் & T20 தொடர் – டேவிட் வார்னர் விலகல்!!

0

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி காயம் காரணமாக இடையிலேயே வெளியேறிய அதிரடி துவக்க வீரர் டேவிட் வார்னர் T20 தொடரில் இருந்தும் விலகி உள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் டெஸ்ட் போட்டியிலும் அவர் பங்கேற்பது சந்தேகமே என கூறப்படுகிறது.

டேவிட் வார்னர் விலகல்:

ஐபிஎல் முடிந்த கையோடு ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்ற இந்திய அணி ஒருநாள், T20 & டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதல் 2 ஒருநாள் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது. இந்திய அணி பேட்டிங், பவுலிங் என இரு பிரிவிலும் தொடர்ந்து சொதப்பி வருவது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. இதனால் எஞ்சியுள்ள போட்டியில் இதுவரை விளையாடாத நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதற்கிடையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பீல்டிங்கின் போது வார்னருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் மைதானத்தில் வலியால் துடித்த அவர் உடனடியாக போட்டியில் இருந்து விலகினார். அதுமட்டுமின்றி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒரு நாள் தொடரை ஆஸி அணி கைப்பற்றி விட்டதால் மீதமுள்ள போட்டியில் அறிமுக வீரர்கள் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘போட்டி நடுவே ப்ரொபோஸ் பண்ண இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்’ – Viral Video!!

டேவிட் வார்னர் அடுத்து வரும் டி20 தொடரிலும் பங்கேற்க மாட்டார். அவரின் உடல்நிலையை பொறுத்தே டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா? மாட்டாரா? என்பது முடிவு செய்யப்படும். இதனால் ஆஸ்திரேலியா அணியின் ஓப்பனிங் வலுவிழக்கும். மீதமுள்ள ஒருநாள் போட்டி வரும் டிசம்பர் 2ம் தேதி நடைபெற உள்ளது. அதன்பின்னர் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 4,6,8 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here