‘போட்டி நடுவே ப்ரொபோஸ் பண்ண இந்திய இளைஞர், ஓகே சொன்ன ஆஸ்திரேலிய பெண்’ – IND vs AUS அப்டேட்!!

0

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் விளாசியது. தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வரும் நிலையில் மைதானத்தில் ருசிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

போட்டி நடுவே ப்ரொபோஸ்:

கொரோனா அச்சத்தால் இந்தியா, ஆஸ்திரேலியா தொடரில் மைதானத்தில் 50% ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளனர். முதல் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது. 390 ரன்கள் கடின இலக்கை துரத்தும் இந்திய அணி தற்போது 41 ஓவர் முடிவில் 260 ரன்கள் எடுத்துள்ளது. கேஎல் ராகுல் அரைசதம் கடந்து களத்தில் உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கிடையில் இந்திய ரசிகர் ஒருவர், ஆஸ்திரேலியா பெண் ஒருவருக்கு போட்டி நடுவே ப்ரொபோஸ் செய்துள்ளார். இதற்கு அந்த பெண்ணும் ஓகே சொல்ல மைதானமே கைதட்டி உற்சாகப்படுத்தினர். இந்த வீடியோ மைதானத்தில் இருந்த பெரிய திரையில் ஒளிபரப்பானது. இதை பார்த்த ஆஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வெல் கைதட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேக்ஸ்வெல் ஒரு இந்திய வம்சாவளி பெண்ணை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும், மேட்ச்ச வேணா ஆஸ்திரேலியா ஜெயிச்சு கப்ப வாங்கிட்டு போட்டும், ஆனா அவுங்க ஊரு பொண்ண நம்ம பையன் தூக்கிட்டான் என நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here