பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி – ரஷ்யா சாதனை!!

0
புற்றுநோயால் பார்வையை இழந்த ரஷ்ய அதிபர் புதின் - 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ முடியும்!!
புற்றுநோயால் பார்வையை இழந்த ரஷ்ய அதிபர் புதின் - 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ முடியும்!!

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ள கொரோனா வைரஸிற்கு எதிரான முதல் தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கி உள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஸ்பூட்னிக் வி’ தடுப்பூசி பல கட்ட சோதனைகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டு உள்ளது.

கொரோனா தடுப்பூசி:

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை பதிவு செய்த நாடு என்கிற பெருமை ரஷ்யாவிற்கு உண்டு. அதன் நம்பகத்தன்மையை நிரூபிக்க ரஷ்ய அதிபர் புதின், தனது மகளுக்கு செலுத்தி பரிசோதனை செய்ததாக தகவல்கள் வெளியானது. மேலும் ரஷ்யாவின் தடுப்பூசி நோய் தடுப்பு சக்தியை தூண்டுவதாக ஆய்வு முடிவுகளில் தெரிய வந்தது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ரஷ்யாவின் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் ஆகியவை இணைந்து உருவாக்கிய கோவிட் -19 க்கு எதிரான ‘ஸ்பூட்னிக் வி’ தடுப்பூசியின் முதல் தொகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டு உள்ளது. தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு விநியோகம் செய்வது குறித்து விரைவில் திட்டமிடப்படும் என ரஷ்ய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

corona vaccines
corona vaccines

அடுத்த தொற்றுநோய்க்கு உலகம் தயாராக இருக்க வேண்டும் – WHO தலைவர் பேச்சு!!

தன்னார்வலர்களிடம் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரஷ்யா புதிய சாதனையை படைத்துள்ளது. ரஷ்ய சுகாதார அமைச்சகம் ஆகஸ்ட் 11ம் தேதி கோவிட் -19 க்கு எதிராக ‘ஸ்பூட்னிக் வி’ என்ற பெயரில் முதல் தடுப்பூசியை பதிவு செய்தது. தலைநகர் மாஸ்கோவின் மேயர் செர்ஜி சோபியானின் கூறுகையில், இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் சில மாதங்களுக்குள் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here