செப்.21 வரை மீன் & இறைச்சி கடைகள் செயல்பட தடை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!!

0

திருச்சி மாவட்டத்தில் உள்ள நவல்பட்டு ஊராட்சி பகுதிகளில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து செப்டம்பர் 21ம் தேதி வரை இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் விதிகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இறைச்சி கடைகள் மூடல்:

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு தளர்வுகளால் பாதிப்பு அதிகரிப்பதை தடுக்க விதிகளை மீறும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு சீல் வைக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் இதுவரை 8,235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், 124 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதுவரை 7,204 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 907 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு உள்ளதால் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டம் புத்தூரில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டில் சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளை பின்பற்றாத காரணத்தால் 8 கடை உரிமையாளர்களுக்கு தலா 5000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் அங்கு இறைச்சி வாங்க சென்ற 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் ஆசை வார்த்தை பேசி மயக்கிய பெண் – நேரில் சென்ற வாலிபருக்கு நடந்த விபரீதம்!!

இந்நிலையில் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சியில் நவல்பட்டு, அண்ணா நகர், போலீஸ் காலனி, பெரியார் நகர் போன்ற கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் செப்டம்பர் 21ம் தேதி வரை மீன் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here