Friday, March 29, 2024

பேஸ்புக்கில் ஆசை வார்த்தை பேசி மயக்கிய பெண் – நேரில் சென்ற வாலிபருக்கு நடந்த விபரீதம்!!

Must Read

சமூக வலைதளமான “பேஸ்புக்” இல் ஆசை வார்தைகள் பேசி கடலூர் இளைஞரை பெண் ஒருவர் ஏமாற்றி நேரில் வரவைத்து அவரை மிரட்டி பணத்தை பறித்துள்ளார்.  இந்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

“பேஸ்புக்” காதல்:

இன்றைய இளைஞர்கள் அதிகமாக பயன்படுத்தும் சமூகவலைதளம் “பேஸ்புக்”. பலரை இணைக்கும் பாலமாக இது திகழ்கிறது. இப்படி இருக்க இந்த சமூகவலைதளத்தை சிலர் தவறாகவும், தந்திரமாகவும் பயன்படுத்துகின்றனர். அப்படி தான் ஒரு இளைஞர் பெண்ணின் மேல் ஏற்பட்ட சபலம் காரணமாக நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டு வந்துள்ளார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர், வினோத் குமார் (28). இவர் தனியார் கம்பெனியில் வெப் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. இப்படி இருக்க இவருக்கு “பேஸ்புக்” இல் நிஷா என்ற பெயரில் பெண் தோழி ஒருவர் கிடைத்துள்ளார். அவர் ஆபாச புகைப்படத்தை பதிவிட்டு வந்துள்ளார். இதனால் சபலம் அடைந்த வினோத் குமார் இவரிடம் நன்றாக பழகியுள்ளார். பின் இருவரும் தங்களது தொலைபேசி எண்ணையும் பகிர்ந்துள்ளனர்.

சபலம்:

இவர்களது பழக்கம் நேரில் சந்தித்து பேசும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இதனால் நிஷா திருச்சியில் உள்ள கஜாமலை என்ற பகுதிக்கு வருமாறு கூறியுள்ளார். ஆனால், அங்கு சென்ற வினோத்குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அந்த இடத்திற்கு போன போது நிஷாவை பார்த்து பேசியுள்ளார், திடீரென அவரை மர்ம கும்பல் பின் இருந்து தாக்கி உள்ளனர். அவரிடம் உள்ள டெபிட் கார்டு, தங்க நகைகள் போன்றவற்றை பறித்துள்ளனர். பின், அவரை சரமாரியாக அடித்துள்ளனர்.

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு!!

Will send you back': Journalist from Kashmir beaten up in Pune - News Nation English

இதனால் வினோத் குமார் காவல்துறையிடம் சென்று புகாரளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பெயரில் நிஷா, முகம்மது யாசிர், ஆசிக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அந்த கும்பலில் மூவர் தப்பித்துள்ளனர், அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். முன்பின் தெரியாதவர்களிடம் பேசி சபலம் கொண்டால் இப்படி தான் நடக்கும் என்று போலீசார் வினோத் குமாருக்கு அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -