Friday, May 17, 2024

பல நெறிமுறைகளுடன் பள்ளிகள் திறப்பு – வெளியான மத்திய அமைச்சர் அறிவிப்பு!!

Must Read

பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் நாடு முழுவதும் அக்டோபர் 15 ஆம் தேதி திறப்பதை அடுத்து மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வழங்கியுள்ளார்.

கொரோனா பரவல்:

கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட பொது முடக்க உத்தரவு தற்போது வரை பால் தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு வருகின்றது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் திறக்கப்படாமல் இருந்தன.

தற்போது வரும் 15 ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் திறக்கப்படலாம் என்று அறிவித்துள்ள நிலையில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

நெறிமுறைகள்:

கொரோனா தடுப்பு நடவடிக்கைளை மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அது,

  • வளாகங்களில் உள்ள கேன்டீன், கழிப்பிடம், சமையல்கூடங்கள், நூலகங்கள், ஆய்வுக்கூடங்கள் இவை அனைத்திலும் கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும். மாணவர்களின் அனைத்து இடங்களும் காற்றோட்டம் உள்ளதாக அமைவது அவசியம்.
  • பள்ளி நிறுவனங்கள் பல்வேறு குழுக்களை அமைக்க வேண்டும். குழுக்களை சேர்ந்தவர்கள் மாணவர்களுக்கு அவசரக்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதையும், சுகாதார நலன்களையும் மாணவர்களுக்கு கற்று தர வேண்டும்.
  • கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக சமூகஇடைவெளி, மனித இடைவெளி இவை அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும். பள்ளி விழாக்கள் நடைபெறுவதை தவிர்த்தல் வேண்டும்.
  • பள்ளிகளுக்கு வரும் மாணவமாணவியர், ஆசிரியர்கள், பணியாளர்கள் என்று அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அதனை நாள்தோறும் அணிந்திருத்தல் அவசியம்.
  • மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் வீட்டில் இருந்து படிக்க விரும்பினால், அதனை நடைமுறைபடுத்தலாம்.
  • மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் கோவிட் 19 நோய் தொற்றை எதிர்கொள்ள தயாராக இருத்தல் அவசியம். கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
  • கல்வியாண்டிற்கான கால அட்டவணையில் நிறுவனங்கள் தங்களுக்கேற்ப மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும். சாப்பாடு இடைவேளை, வகுப்பிற்கான இடைவேளை தகுந்த மாற்றங்களோடு இருக்க வேண்டும்.
  • பள்ளிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆலோசகர்கள் கண்டிப்பாக இருத்தல் அவசியம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தகுந்த இடைவேளைகளில் முழு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடல் நல குறைவினால் பாதிக்கப்பட்டு பள்ளிகளுக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டால் அவர்களை வீட்டில் இருக்க அறிவுறுத்த வேண்டும்.
  • பள்ளிகளுக்கு வருபவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டும்.

இவ்வாறாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அனைவரும் கடைபிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக மக்களே., அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்? வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து குளிர்வித்து...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -