24,046 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி வரும் சிறுகோள் – நாசா எச்சரிக்கை!!

0

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆர்.கே 2 என்ற சிறுகோள் வேகமாக பூமியை நோக்கி வருவதாக தெரிவித்துள்ளது. இது அக்டோபரில் பூமியின் சுற்றுப்பாதையில் நுழையும். இந்த சிறுகோளால் பூமிக்கு எவ்வித தீங்குகளும் இருக்காது என்று நாசா கூறியுள்ளது, இருப்பினும் விஞ்ஞானிகள் அதன் நகர்வு குறித்து உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த சிறுகோள் முதன்முதலில் விஞ்ஞானிகளால் செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டது.

பூமியை நோக்கி வரும் சிறுகோள்:

நாசா வெளியிட்ட தகவல்களின் படி, சிறுகோள் ஆர்.கே 2 ஒரு மணி நேரத்திற்கு 24,046 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வருகிறது. இந்த சிறுகோளின் அகலம் 118 முதல் 265 அடி வரை இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிறுகோள் போயிங் 737 பயணிகள் விமானத்தைப் போல பெரியவை என்று கூறப்படுகிறது. இந்த சிறுகோள் பூமியிலிருந்து பார்த்தால் தெரியாது என்று நாசா தெரிவித்துள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

meteorite from outer space, falling toward planet Earth

இந்திய நேரப்படி இந்த சிறுகோள் மதியம் 1.12 மணிக்கும், இங்கிலாந்து நேரப்படி மாலை 6.12 மணிக்கும் பூமிக்கு மிக அருகில் செல்லும். இந்த சிறுகோள் பூமியிலிருந்து 2,378,482 மைல் தூரத்தில் பயணிக்கும் என்று நாசா மதிப்பிட்டுள்ளது.

2025 இல் பெரிய ஆபத்து??

2020-2025 க்கு இடையில், விபி 1 என பெயரிடப்பட்ட சிறுகோள் பூமியைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது, ஆனால் அது 7 அடி அகலம் மட்டுமே. ஒரு பெரிய 177 அடி சிறுகோள் (ED224) 2023-2064 ஆண்டுகளுக்கு இடையில் பூமியைத் தாக்கும். நாசா ஏற்கனவே இத்தகைய தாக்குதல் அச்சுறுத்தல்களை கண்காணித்து வருகிறது. அடுத்த 100 ஆண்டுகளில், இதுபோன்ற 22 சிறுகோள்கள் பூமியை நோக்கி நகர உள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவை பூமியைத் தாக்கும் வாய்ப்பு அதிகம் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here