விடுதலை செய்யப்படுவாரா பேரரறிவாளன்?? உச்ச நீதிமன்றத்தில் நாளை இறுதி விசாரணை!!

0

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் விடுதலை கோரி தாக்கல் செய்த மனுவின் மீதான இறுதி விசாரணை நாளை நடைபெறவுள்ள நிலையில் அவர் விடுதலை செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பேரறிவாளன் வழக்கு:

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி கடந்த 30 வருடங்களாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உச்சநீதி மன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு விடுதலை அளிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மாநில அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வழக்கில் முடிவு செய்யலாம் என்று தெரிவித்தது. இதைதொடர்ந்து தமிழக அரசு கடந்த 2018 செப்டம்பர் 19ம் தேதியே பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்துவிட்டதாக தெரிவித்தது.

மாஸ்டர் பட காட்சிகள் இணையதளத்தில் லீக் – தயாரிப்பாளர் 25 கோடி கேட்டு நோட்டிஸ்!!

ஆனால் மத்திய அரசு இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில் இந்த வழக்கில் முடிவு செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கோ மத்திய அரசுக்கோ கிடையாது என தெரிவித்தது. அதன் பிறகு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெளனமாக இருந்து வருகிறது.

மீண்டும் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை – வாடிக்கையாளர்கள் அதிருப்தி!!

இந்நிலையில் நாளை மீண்டும் பேரறிவாளனின் வழக்குக்கு மீதான இறுதி விசாரணை நடைபெறவுள்ளது. தற்போதாவது தமிழக அரசு தனது இறையாண்மையை உச்சநீதி மன்றத்தில் நிலைநாட்டுமா? தனது ஆதிக்கஞ் குறித்த கேள்விக்களுக்கு பதிலளிக்குமா? என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. பேரறிவாளனின் விடுதலை சாத்தியமாகுமா என்பது நாளைய விசாரணைக்கு பிறகு தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here