இந்திய அணியின் மகத்தான வெற்றி – சுந்தர் பிச்சை ட்வீட்!!

0

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது இந்தியஅணி.

இந்திய அணி வெற்றி

ஆஸ்திரேலியாவில் காபா டெஸ்ட் போட்டியின் 5வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. 328 ரன்கள் இலக்குடன் விளையாட தொடங்கிய இந்தியஅணியின் தொடக்கம் சுமாராக இருந்தது. முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஆடிய சுப்மான் கில் மற்றும் புஜாரா அணியை தாங்கிபிடித்தனர். ரன்களை குவித்து வந்த சுப்மான் கில் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து வந்த கேப்டன் ரஹானே 22 ரன்களிலும் தொடர்ந்து புஜாரா 56 ரன்களிலும் ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய மயங்க் அகர்வால் 9 ரன்களில் ஆட்டமிழக்க ரிஷப் பாண்டுடன் வாஷிங்டன் சுந்தர் கை கோர்த்தார்.

லாரி மோதியதில் சாலையோர தொழிலாளர்கள் 15 பேர் பலி – குஜராத்தில் பதைக்கவைக்கும் சம்பவம்!!

அதிரடியாக விளையாடிய இந்த ஜோடியில் சுந்தர் 22 ரன்களில் ஆட்டமிழக்க ரிஷப் பண்ட் 89 ரன்களை எடுத்து, இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் வெற்றியடைந்தது. இந்திய அணியின் இந்த வரலாற்று வெற்றிக்கு பரிசாக ரூ.5 கோடி போனஸ் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த செய்தியை ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் வெற்றியை தொடர்ந்து கூகுளின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை,  ‘இந்திய கிரிக்கெட் அணிக்கு இது மகத்தான வெற்றி’ என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here