லாரி மோதியதில் சாலையோர தொழிலாளர்கள் 15 பேர் பலி – குஜராத்தில் பதைக்கவைக்கும் சம்பவம்!!

0

குஜராத்தில் கூலித்தொழிலாளிகள் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது லாரி மோதியதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 15 தொழிலாளிகள் உடல் சிதைந்து பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

கூலித்தொழிலாளர்கள் பலி

ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாடாவை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் கொசாம்பா என்ற இடத்தில் தங்கி வேலைபார்த்து வந்தனர். பகல் நேர வேலை முடித்து இரவில் சாலையோரங்களில் அவர்கள் தங்கி வருவது வழக்கம். திங்கள்கிழமை அன்று கரும்புகள் ஏற்றிக்கொண்டு அந்த வழியாக வந்த லாரி ஒன்று நிலை தடுமாறி சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ஏறியது.

மீண்டும் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை – வாடிக்கையாளர்கள் அதிருப்தி!!

தூங்கிக்கொண்டிருந்த நிலையிலேயே அவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். முதலாவது 13 பேர் உடல் கண்டுபிடிக்கபட்ட நிலையில் தற்போது 15 பேர் இறந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் படுகாயமடைந்த 6 பேரை மீட்டு பொதுமக்களும் போலீஸ் அதிகாரிகளும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் எனவும் தகவல்கள் வந்துள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவை பதிவிட்டுள்ளார். அதில், ‘விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் பிரதமர் நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் வழங்கப்படும். மேலும் காயமடைந்த ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 வழங்கப்படும்’ என கூறியிருந்தார். இதை தொடர்ந்து குஜராத் மாநில முதல்வர், தனது இரங்கல் பதிவுடன் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டும் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here