மீண்டும் உயர்ந்து வரும் தங்கத்தின் விலை – வாடிக்கையாளர்கள் அதிருப்தி!!

0

கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக தங்கத்தின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. பண்டிகை காலத்தில் கூட தங்கத்தின் விலை மிகவும் குறைந்தே காணப்பட்டது. தற்போது மீண்டும் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டிருக்கிறது.

அதிகரிக்கும் தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால் உலக முதலீட்டாளர்கள் முதலீடுகளை தங்கத்தில் செலுத்தி வருகின்றனர். பங்குசந்தை, அமெரிக்க டாலர்கள் மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடுகளை செலுத்திவரும் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை தங்கத்தின் மேல் மாற்றி வருகின்றனர். தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால் தற்போது தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கடந்த ஜனவரி 7 ம் தேதி முதல் தங்கத்தின் விலை சற்று இறக்கத்துடன் காணப்பட்டது. இதை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டிவந்தனர். மேலும் பொங்கல் பண்டிகை காலத்திலும் கூட தங்கம் விலை மிகவும் குறைந்து காணப்பட்டது. தற்போது கடந்த இரண்டு நாளாக தங்கத்தின் விலை மீண்டும் உயர்வை சந்தித்திருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இதுதான் காரணம் – மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் விளக்கம்!!

சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,976 க்கு இன்று விற்கப்படுகிறது. தங்கம் ஒரு கிராமிற்கு ரூ.9 உயர்ந்து ரூ.4,622 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் வரை உயர்ந்து தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ.70.60 க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.70,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here