பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இதுதான் காரணம் – மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் விளக்கம்!!

0

முன்னெப்போதுமில்லாத அளவில் தற்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. கச்சா பொருட்களின் உற்பத்தி குறைவே அதற்கு காரணம் என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

எரிபொருட்கள் விலை உயர்வு:

கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எழுந்த கண்டனங்களை தொடர்ந்து மத்திய அமைச்சர், தர்மேந்திரா பிரதான் தற்போது விளக்கம் அளித்துள்ளார். “உலக அளவில் நிகழ்ந்த பொதுமுடக்கம் காரணமாக கச்சா பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகள் தங்கள் உற்பத்தியின் அளவை குறைதத்து விட்டன. அதன் காரணமாகவே தற்போது இந்தியாவிலும் பெட்ரோல், டீசலின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளது” என்று தெரிவித்துளார்.

அடையாறு புற்றுநோய் நிறுவன தலைவர் டாக்டர் சாந்தா மரணம் – கடந்து வந்த பாதை!!

மேலும் அவர் கடந்த சில மாதங்களுக்கு பீப்பாய் 35 டாலராக இருந்த கச்சா எண்ணெய் தற்போது உற்பத்தி குறைவினால் பீப்பாய் 55 டாலராக விற்கப்பட்டு வருகிறது. இந்தியா தனது எரிபொருள் தேவைகளுக்கு 80% அளவுக்கு வெளிநாடுகளையே நம்பியுள்ளதால் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தது இந்தியாவிலும் எதிரொலிக்கிறது என்றும் இதன் காரணமாகவே சூரிய எரிசக்தியை உபயோகித்தல், மின்சார வாகனங்களை பயன்படுத்துதல், பெட்ரோலில் எத்தனால் கலக்கும் முயற்சிகள் என அரசு பல்வேறு வழிகளையும் திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here