அடையாறு புற்றுநோய் நிறுவன தலைவர் டாக்டர் சாந்தா மரணம் – கடந்து வந்த பாதை!!

0

சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவரு,ம் மூத்த புற்றுநோயியல் நிபுணருமான டாக்டர் சாந்தா இன்று அதிகாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். 94 வயதான இவர் உடல்நலக் குறைபாட்டால் தற்போது உயிரிழந்துள்ளார்.

டாக்டர் சாந்தா மரணம்:

94 வயதான டாக்டர் சாந்தா உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது ரத்த குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.35 மணியளவில் உயிரிழந்தார். 1995 ம் ஆண்டு முதல் சென்னை அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் டாக்டர் சாந்தா. ஏழை எளிய மக்களுக்கு தரமான விலையில் புற்றுநோய்க்கான மருத்துவம் கிடைக்க வேண்டும் என தன் வாழ்நாள் முழுவதும் அதில் அர்ப்பணித்தவர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மார்ச் 11, 1927ம் ஆண்டு புகழ் பெற்ற குடும்பத்தில் பிறந்தவர் சாந்தா. நோபல் பரிசு பெற்ற சி.வி ராமன், எஸ். சந்திரசேகர் ஆகியோர் இவரது சொந்த மாமா ஆவர். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன் விருது மற்றும் பத்மவிபூஷன் விருது முறையே அப்போதிருந்த ஜனாதிபதி ஏ.பி. ஜே அப்துல்கலாம் மற்றும் பிரணாப் முகர்ஜீ ஆகியோரிடமிருந்து பெற்றார். மேலும் ரமோன் மக்சசே விருதையும் பெற்றுள்ளார்.

தற்போது காந்தி நகரிலுள்ள புற்றுநோய் மையத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கிறது. 65 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ரெசிடெண்ட் மருத்துவ அதிகாரியாக சேர்ந்த அதே இடத்தில் தற்போது அவரது உடல் வைக்கப்பட்டிருக்கிறது. டாக்டர் சாந்தாவின் வழிகாட்டியான மறைந்த முன்னாள் டாக்டர் எஸ். கிருஷ்ணமூர்த்தியின் உடலும் அதே இடத்தில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here