மருத்துவர் சாந்தாவின் நல்லடக்கம் காவல துறை மரியாதையோடு நடைபெறும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!!

0

அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரும் மூத்த புற்றுநோயியல் மருத்துவருமான சாந்தா இன்றுக்கு காலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது நல்லடக்கம் காவல் துறை மரியாதையோடு நடைபெறும் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நல்லடக்கம்:

சென்னை அடையாறு  புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்சி கழகத்தின் தலைவரும் மூத்த புற்றுநோயியல் நிபுணருமான சாந்தா இதய சம்பந்தமான பிரச்னைக்காக அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் அவர் பணிபுரிந்த அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அடையாறு புற்றுநோய் நிறுவன தலைவர் டாக்டர் சாந்தா மரணம் – கடந்து வந்த பாதை!!

இந்நிலையில் இதுகுறித்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி ” மருத்துவர் சாந்தாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது, அவரின் உடல் காவல்துறை மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார். மருத்துவர் சாந்தா தனது அர்பணிப்புணர்வுடன் கூடிய பணிகளுக்காக பத்மபூஷன், பத்மவிபூஷன் மற்றும் ராமன் மகசேசே ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here