உடல் பருமனுக்கான முக்கிய காரணம் என்ன தெரியுமா?? வாங்க தெரிஞ்சிக்கலாம்!!

0
Obesity-body
Obesity-body

உடல் எடையை குறைக்க நாம் பல வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். உடற்பயிற்சி, டயட், யோகா என பல முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். ஆனால் எதனால் நமக்கு உடல் பருமன் ஏற்படுகிறது என்பதை அறிந்து கொண்டால் உடல் எடையை குறைப்பது சுலபமாகி விடும்.

உடல் பருமன்:

எப்பொழுதும் நம் பெரியவர்கள் கூறுவது பகலில் ராஜா மாதிரி சாப்பிட வேண்டும். மதியம் மந்திரி போல் சாப்பிட வேண்டும். இரவில் கிடைத்தவற்றை மட்டும் சாப்பிட வேண்டும் என்பது தான். ஆனால் பெரும்பாலானோர் காலை உணவை தவிர்த்து விடுகின்றனர். காலை உணவு மிக முக்கியான ஒன்றாகும். சாப்பிடாமல் இருக்கும் போது நமது எலும்பில் உள்ள கால்சியத்தை குடல் உறுஞ்சி விடும். இதனால் தான் பலருக்கு மூட்டுவலி. எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படுகிறது. மேலும் பசியில் இருக்கும்போது அதிகப்படியான காற்று உள்ளிழுக்கப்படுவதால் உடல் பருமன் ஏற்படுகிறது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

morning breakfast
morning breakfast

பலர் அதிகம் சாப்பிட்டால் தான் உடல் பருமன் ஏற்படுகிறது என நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் அதிகம் சாப்பிடுபவர்கள் தான் ஒல்லியாக காணப்படுகின்றனர். காலை வேளையில் தான் நமது உடலில் மெட்டபாலிசம் அதிகம் வேலை செய்யும். எனவே காலை உணவை கட்டாயம் தவிர்க்க கூடாது. மேலும் இரவு நேரங்களில் எளிமையான உணவுகள் மட்டுமே உட்கொள்ள வேண்டும். அதிகப்படியான அல்லது விருந்து சாப்பாடுகளை சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரித்து உடல் பருமனை ஏற்படுத்தும் என ஒரு ஆய்வு கூறுகிறது.

obesity reason
obesity reason

இரவு நேரங்களில் அதிகப்படியான உணவுகளை சாப்பிட்டுவிட்டு அப்படியே தூங்க செல்கிறோம். சில சமயங்களில் 10 மணிக்கு மேல் சாப்பிடுகிறோம். இது முற்றிலும் தவறு. இதனால் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு உடல் பருமனையும் அதிகரிக்கிறது. துரித உணவுகள், நேரத்திற்கு சாப்பிடாதது போன்றவையே உடை பருமனுக்கு அதிக காரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here