நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துக் கழகம் – பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்படுமா??

1
transport
transport

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடுகள் எங்கிலும் பள்ளி கல்லூரிகள் , அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும் பொதுப்போக்குவரத்தான பேருந்துகள், ரயில்கள் தடை செய்யப்பட்டது. தற்போது போக்குவரத்துகள் இயங்க தொடங்கி உள்ள நிலையில் பெரும்பாலான மக்கள் அரசு பேருந்துகளை தவிர்த்து வருவதால் போக்குவரத்து கழகத்தின் வருமானம் சரிந்துள்ளது.

போக்குவரத்து கழகம்:

தமிழகத்தில் மார்ச் மாதம் போடப்பட்ட ஊரடங்கு தற்போது பல தளர்வுகளுடன் செப்டம்பர் 31 வரை நீடிக்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுப்போக்குவரத்துகள் இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. சென்னையில் 5 மாதத்திற்கு பிறகு பல கட்டுப்பாடுகளுடன் அரசு பேருந்துகள் யாவும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது பெரும்பாலான மக்கள் அரசு பேருந்துகளை தவிர்த்து வருகின்றனர். சென்னையில் 2300 பேருந்துகள் சமூக இடைவெளியை பின்பற்றி இயக்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவையை கருத்தில்கொண்டு அதிகளவிலான பேருந்துகளை இயக்க அரசு அனுமதியளித்தது.

chennai bus stop
chennai bus stop

ஆனால் மக்கள் பலரும் பேருந்தில் செல்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் தற்போது வசூலாகும் பயணிகளின் டிக்கெட் காசை வைத்து பேருந்துகளுக்கு டீசல் நிரப்ப கூட முடியவில்லை என போக்குவரத்து அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் ஒரு நாளைக்கு ரூ.3 கோடி வரை வருமானம் ஈட்டி வந்த பேருந்து போக்குவரத்து தற்போது ரூ.1 கோடி கூட சம்பாதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

tamilnadu transport
tamilnadu transport

இந்த சூழ்நிலையில் போக்குவரத்து துறையின் மூத்த அதிகாரி இதை பற்றி கூறுகையில், ஒரு பேருந்திற்கு 60 லிட்டர் டீசல் தேவைப்படும். அரசு பேருந்துகள் லிட்டருக்கு 6 கி.மீ மைலேஜ் கொடுக்கும். ஆனால் தற்போது அரசு பேருந்துகள் பழுதான நிலையில் அதிக டீசலை குடிக்கிறது என்று கூறியுள்ளார். இந்த பல சிக்கல்களிலும் அரசு பேருந்துகளை நிறுத்துவது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here